அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

காவிரியில் வெள்ள அபாயம்

இன்று காலை 4.30 மணியளவில் மொத்த கொள்ளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை. சென்ற 2000 தான் அணை நிரைந்தது தற்போது 34 ஆயிரம் கணஅடி தண்ணீர் வருகிறது.
மகாராஸ்டிரத்தில் வெள்ளம் கர்னடாகவில் வெள்ளம் இப்போது இங்கா? வேண்டாம்.

போதும் வர்ணபகவானுக்கு கடகடா கட் தந்தி கொடுங்கள்
இனிமேல் நமது அரசியல் வாதிகள் காவிரியை மறந்துவிடுவார்கள் . அடுத்தண்டுதான் இந்த நினைப்புவரும்.
கொஞ்சம் மத்திய அரசுக்கும் கர்னாடகா அரசுக்கும் நிம்மதி.
"பாருங்கள்! பாருங்கள்!! மத்தியில் எங்கள் ஆட்சி வந்ததால் தான் காவிரி நிரைந்தது". காங்கிரஸ்
"அம்மா தண்ணீர் பிரதமரிடம் கேட்டார், அவர் கண்டுகவேயில்ல!! அதனால் அன்னை மாதா மழைபொழிய வைத்தாள்" : அதிமுக
"எங்..க..ள்..கூ..ட்..டா..ட்..சி...யா..ல்..தா..ன்..ம..ழை..பொ..ழி..ந்..து. மேட்டூர் அணைநிரம்பியது" : திமுக

என் எண்ணங்கள் ஆயிரம்

கட்டோடே கணத்தோடே என்னடா வாழ்க்கை வாழுகிறாய் உன்னுடைய
வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா கட்டோடே கணத்தோடெ வாழ்கின்றோம் என்றே சொல்லுகின்றாய் ஆனால் உன்னோட கண்ணோடே
கருத்தோடெ எந்த இறைவன் உன்னைப்படைத்தனோ அவனை நினைக்கவில்லை பட்டோடும் பணியோடும் தெருவிலே திரிகின்றாய் பகட்டாக. ஆனால் உன் எதிரில் பசியோடு வருகின்றானே அவன் முகத்தை பாத்து ஒருகணமாவது நீ வருந்தியதுண்டா? கொட்டோடே முழக்கோடே கோலங்கொண்டு ஊர்வலம் வருகின்றாய பேரணிநடத்துகிறாய் அனைத்தையும் செய்கின்றாய் ஆனால் நல்ல குணத்தோடே குறிக்கோலோடே உன் வாழ்க்கையை நினைத்ததுன்டா? அட பைத்தியகாரா எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணக்கூட உனக்குத்தெரியாமல் இருக்கிறதே இது வாழ்க்கையா.
என்னார்

கைகேயி



சணிபகவான் சடுதியில் அயோத்தி சிம்மாசனத்தை பிடிப்பான் என உணர்ந்த கைகேயி

தான் பெற்றெடுக்காத தன் மகனையும், மணாளனையும் காக்க

தான்பெற்ற தன் மகனையே பழிகொடுக்க நினைத்து பழிச்சொல்லில்

அகப்பட்டாள் அண்ணையவள்

ஆடி முன்னின்ற அழகு பார்த்த மாமன்னர் கண்டான்!

காலன் அனுப்பிய கடுதாசியை

வேறொன்றுமில்லை வேலை வந்துவிட்டது நீ காடேக!

நரை காட்டியது முதுமையென

காலமாகும் வரை காட்டில் காலந்தல்ல வேண்டியது அக்கால மரபு.

கலங்கினாள் அழுதாள் இறைவனைத் தொழுதாள் வேறு வழியில்லையா?

என தனக்குத்தானே கேள்வியும் பதிலுமாய்; தேரினாள் ;

தேரினாள் மன்னனிடம் வரம்பெற்ற உத்தமி.

அப்போடு தான்பெற்ற தங்கமகனை பிரிந்து காணகம் சென்றால் இறந்தல்லவா போவார்

பிரிவு தாளாமல். ஆம் இது தான் வழி ஈரேழு ஆண்டுகள் ராமசூரியன் காடாளவும் பரதன் நாடாளவும் காணகத்தில் தந்தையும் மகனும் இணைந்திருக்கட்டுமே !! அதற்குள் சணிபார்வையும் போய்விடும். சொன்னால் கேட்க மாட்டாரே!! என அன்று சண்டைத்தேரில் பெற்றவாக்குறுதியை நிலைநாட்டி முத்தாலியையும் நிலைநாட்ட முனைந்தாள்.

விதி செய்த சதியை இச்சதியால் முடியுமா? முடியவில்லை எல்லாம் விதி வழியே நடந்து முடிந்தது

வந்தான் பரதன் அன்னையை ஏசினான்,பேசினான், ஓடினான் அண்ணன் ராமன் சென்ற காட்டிற்கு வழியில் கண்டான்," அண்ணா நீ யில்லத இடத்தில் நானா? "என கேட்டு ,

"உனது பாதுகைகளைக்கொடு அது இந்த நாடாளட்டும் எனக்கு அரசுரிமை வேண்டாம்."

பாதுகையை பெற்று வந்து

பெற்ற மகனையே சணிக்கு தாரைவார்க்கும் தாயே!! நான் நாடாண்டால் என்னவாகும் தெரியுமா உனக்கு, நாசமா போவேன். உன் மகன் செருப்பை வைக்கிறேன் அவன் படும் பாட்டைப்பார்."

அந்த செருப்பு நாடாண்டதற்கே அச்செருப்புக்குச்சொந்தகாரன் ராமன் பட்ட பாடு உலகறியும் மன்னன் ஆண்டால்?.

வாலி:"ராமா உன் மனைவி ஒருத்திக்காக இத்தனைபேரைக்கொன்றாயே! கோழை நேருக்நேர் நின்று போரிட வக்கற்ற நீ எப்படி சக்ரவர்த்தி திருமகனாய்ப் வளந்தாய். உன் மனைவி வேண்டு மென்று என்னிடம் சொல்லியிருந்தால் இங்கிருந்து ஒருகுரல் கொடுத்தாலே இராவணன் உன் மனைவியை கொண்டு வந்து விட்டிருப்பானே!! . சூரிய குலத்தில் பிறந்த நீ இனி ராமசூரியன் இல்லை குற்றமுள்ள சந்திரன் ராமசந்திரன் இந்த பெயர் தான் உனக்கு நிலைத்து நிற்கும்."





தமிழகத்தில் புவியியலில் மாற்றங்கள்

சில நாட்களுக்கு முன் திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டி புதூரி்ல் நிலத்தில் நெருப்பு சாம்பல் பணைமட்டையே பிடித்து எறிந்ததாக தகவல்.


சென்னயில் கடல் கொந்தளிப்பு


கும்பகோணத்தில் நிலத்தில் வெடிப்பு

இவைகளுக்கு காரணம் என்ன?

பெர்முடா முக்கோணம்

பெரமுடா முக்கோணம் என்ற ஒரு சூன்ய பிரதேசம் ஒன்றுண்டு அதன் வழியாகச் சென்றவர்கள் சிலர் மீள்வதில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். விமானத்தில் சென்றால் ஒரு வகை காந்தத்தால் ஈர்க்கப்பட்டு எங்கோ செல்வதாகவும் தனது திசைகாட்டி வேலை செய்ய வில்லை ,எனவும் விமானி தனது கட்டுப்பட்டறைக்கு தகவல் தெறிவித்துக்கொண்டு சிறிது சிறிதாக சப்பதம் குறைந்து பிறகு விமானம் காணாமல் போவதாகப் படித்திருக்கிறேன். கப்பலில் சென்றாலும் அப்படித்தான் என கேள்விப் பட்டிருக்கிறேன்

இன்று அந்த இடம் எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை

இந்தி அறிவே காரணம்




1960களில் இந்தி எதிர்ப்பு என்றபெயரால் 2 தலைமுறை தமிழர்களை இந்தி படிக்கவிடாமல் செய்த கருணாநிதி இன்று 'தன் பேரன் தயாநிதி மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டதற்கு அவரது இந்தி அறிவே காரணம்' என்கிறார். இந்த கருணாநிதி வார்த்தைகளை வேத வாக்காக கொண்ட இளிச்ச வாய்த்தனத்தால், வட, மத்திய, கிழக்கு மாநிலங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் இந்தி தெரியாமல் அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இது போதா தென்று இப்போதுபுதிதாகப் புறப்பட்டுள்ளார் ராமதாஸ். கருணாநிதி இந்திக்கு எதிரி என்றால். இவர் ஆங்கிலத்துக்கு எதிரி, இன்று உலகமயமாக்களில் ஆங்கிலம் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பதால் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் கூட ஆங்கிலம் படிக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் தமமிழகத்தில் ஆங்கிலத்துக்கு மங்களம் பாட கிளம்பி விட்டார் ராமதாஸ்.

தமிழினத்தைக் காப்பதாகக் கூறி, தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்என்று சொல்லும் ராமதாசின் பேத்திகள் பெயர் ஸங்கமித்ரா, ஸம்யுக்தா இவர்கள் படிப்பதோ ஆங்கிலப்பள்ளி. அந்தப் பள்ளியில் இரண்டாவது மொழி இந்தி. ஆனால் தமிழகத்தில் உள்ள ஏழைத் தமிழன் மட்டும் ஆங்கிலம் படித்து விடக்கூடாது. 5 ஆண்டுகள் அமைச்சராக இருக்கப்போகும் அன்புமணி, தனது குழந்தைகளை டில்லியில் தான் படிக்க வைக்க வேண்டுமா?.

இங்குதான் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்களே, இங்கேயே தமிழ்வழிக் கல்வி படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியதுதானே!

கருணாநிதி போல தனக்கும் தனதுகுடும்பத்துக்கும் ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம். இதை யாராவது அவரிடம் கேட்டால் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டி மிரட்டுகிறார். உள்ளும்புறமும் ஒரே மாதிரியாக செயல்பட முடியாத அரசியல்வாதிகள் இது போன்ற சிக்கலான பிரச்சனைகளில் வாயை மூடிக் கொண்டிருப்பதே உத்தமம்.

தங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய கல்விளை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே உண்டு. அதில் வரம்பு மீறி தலையிடும் அதிகாரம் எந்த அரசியல் வாதிக்கும் கிடையாது.

அத்தியவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு நல்ல நிர்வாகத்தை ஆளுங்கட்சி கொடுக்க வேண்டும். தவறும்போது அதை தட்டிக் கேட்டு, சரியான பாதையில் ஆங்கட்சி செல்ல எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்டபு தரவேண்டும், எனட்பதற் காகத்தான் தேர்லில் மக்கள் ஓட்டுப்போடுகின்றனர். பொது மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் மூக்கை நுழைக்க இவர்களுக்கு யாரும் அதிகாரம் அளிக்க வில்லை.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த மொழி தமிழ். கருணாநி, ராமதாஸ் ஆகியோருக்கு முன்பும் நிலைத்து நின்றது.இவர்களுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கும் தகுதி வாய்ந்தது. மக்களை ஏமாற்றும் போலி அரசியல்வாதிகள் வந்து காப்பாற்றும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கவில்லை தமிழ் மொழி. மக்கள் உரிமைகளில் வரம்பு மீறி தலையிடுவதை இவரகள் தவிர்க்க வேண்டும்.


இந்த செய்தி 9-8-05 தினமலரில் சகோதரி -பிகதீஸ்பரி ராஜப்பன் கங்காதரபுரம், அறந்தாங்கி எழுதியிருந்தார் நன்றாக இருந்தது அன்று இந்தி என்ற மாயத்தோற்றத்தைக் காட்டி ஓட்டுகளை விலைக்கு வாங்கியது போல் ராமதாசும் முயல்கின்றார் வேறு ஒன்றம் இல்லை. நானும் ஏற்கவே எனத கருத்தையும் கூறியுள்ளேன்.

அன்று கருணாநி கேட்டார் ,"காங்கிரஸ் என்ன நேரு வீட்டு பரம்பரை சொத்தா" என்று இன்று ??





அமெரிக்காவைக் காண வந்த கொலம்பஸுக்கு சோதணை

அமெரிக்காவைக் கண்டு பிடிக்க மாலுமித் தலைவர் கொலம்பஸ் ஸ்பெயன் நாட்டிலிருந்து இருபது மாலுமிகளுடன் சிறிய கப்பலில்கடல் பயணம் பசிபிக் பெருங்கடலில் தொடங்கியது.
சுற்றிலும் கடல். . . கடல் . . . . . கடல் தவிற வேறு எதுவும் இல்லை. இவ்விதம் 24 நாட்கள் கழிந்தன. கண்ணுக்கெட்டியதூரம் வரை கரை தென்படவில்லை.
கப்பலில் இருப்பவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்க அதிகாரி ஒருவர் இருந்தார் அவர் பெயர் ரொனால்டு இது வரை பயணித்தது 24 நாட்கள் ஆகிவிட்டது ; கப்பலில் இருக்கும் உணவு அத்தனை பயணிகளுக்கும் எத்தனை நாட்களுக்கு வரும் என கணக்குப் பார்த்தார், அது 20 மாலுமிகளுக்கும் 24 நாட்களுக்கு மட்டுமே வரும் என தெரிந்தது.
இது வரை கரை காணவில்லை இனி கப்பலை புறப்பட்ட இடத்தை அடைய இன்னும் 24 நாட்களாகும். எனவே உடனே திரும்ப முடிவெடுத்தார்.
உயிர் மீது ஆசை கொண்ட சில மாலுமிகள் ரொனால்டு கருத்தை ஆமோதித்தனர். கொலம்பஸ் தவிர, கப்பலில் இருந்து 19 பேரும் கப்பலை திருப்ப முடிவெடுத்தனர், இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் மேல் தளத்தில் இருந்து கரை தெரிகிறதா? என்று பார்த்ததுக் கொண்டிருந்தார் கொலம்பஸ், அவரிடம் விஷயத்தை கூறினர்.
'அமெரிக்காவைக் காணவேண்டும் என்பது உயரிய லட்சியம் உணவும் தண்ணீரும் அதில் குறுக்கிடுவதா? புதிய உலகம் காண புறப்பட்ட பாதையைமாற்றுவதா? என்று யோசித்தார். கோழை உள்ளம் கொண்டவர்களைக் கண்டு அனுதாபப்பட்டார். "எக்காரணம் கொண்டும் பின்வாங்குவதில்லை. கப்பல் முன்னோகக்கிதான் செல்லும். நடப்பது நடக்கட்டும்" என்றார்.
அவரது கட்டளை புறக்கணிக்கப்பட்டது. டஸ்பெயின் திரும்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கொலம்பஸ் அதிர்ந்தார், எதிர்ப்பு தெரிவித்தார் இதனால் அவரது தலைமைப் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது. அவரை கைது செய்ய மற்ற மாலுமிகள் உத்தரவிட்டனர். கப்பல் தளத்திலேயே சிறைவைக்கப்பட்டார்.
தலைமைப் பதவியை ரொனால்டு எடுத்துக் கொண்டார். கைகள் கட்டப்பட்ட நிலையிலும், கொலம்பஸ் சோர்ந்து விடவில்லை. அவரது சிந்தனையில் புது யோசனை தோன்றியது. ரொனால்டை அழைத்தார். "கப்பலில் இருக்கும் உணவு இருபது பேருக்கு 24 நாட்களுக்கு வரும் . அந்த இருபது பேரில் நானும் ஒருவன் , ஒருவேளை நான் சாப்பிடாமலும், நீர் அருந்தாமலும் இருந்தால் என் 24 நாட்களுக்கான உணவும் நீரும் உங்கள் 19 பேருக்கும் ஒரு நாளைக்கு போதுமே . எனவே கப்பலை மேலும் ஒருநாள் முன்னோக்கி செலுத்துங்கள் . இந்த ஒரு நாளில் ஒருவேளை கரைஎதுவும் நாம் காணாவிட்டால் என்னை கடலில் தள்ளிவிடுங்கள் அதனால் மிச்சமாகும் உணவும் நீரும் ஊர் போய்ச் சேரும் வரை உங்களுக்கு போதும்" என்றார்.
மாலுமிகளுக்கு கணக்கும் பரிந்தது. தங்கள் கடமையும் புரிந்தது. கொலம்பசை அவிழ்த்து விட்டனர் கப்பல் முன்னோக்கிநகர்ந்தது.
இருபதே மணிநேரத்தில் . . .கரை தெரிந்தது. அதுதான் அமெரிக்கா!
சிக்கலான சூழ்நிலையிலும் கூடதன் இலக்கை மாற்றிக்கொள்ள கொலம்பஸ் தயாராக இல்லை. அவரது உள்ளத்தில் இருந்த உறுதிதான் வரலாற்றில் கொலம்பசுக்கு நீங்காத இடத்டதை தந்திருக்கிறது.

அது சரி அந்த இடத்திலிருந்து ஒரு நாள் பயனித்தால் திரும்ப ஒருநாள் ஆக இரண்டுநாளாகும்




இராமேச்சுரம்

1911 ஆம் ஆண்டு சூன் திங்கள் இராமநாதபுரம் மாவட்டம் அமைக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்துடன் இணைந்திருந்த சாத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டங்களையும், மதுரையுடன் இணைந்திருந்த சிவகங்கைப் பகுதியையும் இணைத்து இராமநாதபுர மாக்கினர்.

நாடு விடுதலை பெற்ற பின்னர் மக்களாட்சி(15-8-1948) மலர்ந்தது. தொன்மைச் சிறப்பு வாய்ந்த, தென்னகத்திலேயே மிகப் பெரிய சமீனாக இருந்து வந்த சேதுபதிகளின் உரிமையை 7-9-1949 இல் சமீன் ஒழிப்பு முறையில் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. நட்ட ஈடாக நாற்பத்து ஏழு இலட்சம் வெண்பொற்காசுகள் சேதுபதி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

அறுபத்து நான்னு பீடங்களில் இராமநாதபுரமும் ஒன்றாகும். நெடுங்காலமாகவே பல துறவிகள் வாழ்ந்த இடமுமாகும். 1581 ல் தாயுமான சுவாமிகள் இறுதிக் காலத்தில் சிறப்பெய்திய இடம். எண்ணற்ற துறவிகளும், யோகிகளும் வாழ்ந்த பல இடங்கள் முகவைக்குப் பெருமை சேர்க்கின்றன. அவைகளில் குறிப்பிடத்தக்கது இராமேச்சுரம் ஆகும். "இமசேது" என வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அணையே இமயமும் சேதுவாம் இராமேச்சுரமுமாம்! இவ்விணைப்பே இராமேச்சுரத்தின் இணையிலாப் பெருமையை விளக்கும்.

"தேவியை வவ்விய தென்னிலனங்கைத்தச மாமுகன்

பூவியலும் முடிபொன்று வித்தபடி போயற

ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்" தேவாரம்.

பழமைக்கும் பழமையான பெருமையுடைய

இராமேச்சுரம் சேதுபதிகளின் சிறப்பனைத்திற்கும்

உரித்தானவையாக இருந்தது. முகவையுடன் இணைந்தே இருந்தது.

கோயில் கடற்கற்களால் அமைந்திருந்தது அம்பா சமுத்திரத்திலிருந்து கருங்கல்லைத் தயாரித்து மாட்டு வண்டிகளில் கொண்டு வந்து "இராமநாதர்" "பர்வதவர்த்தனி" என்ற பாய்மரத் தோணியில் தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இராமேச்சுரம் கொண்டுவந்து கோயிலைப் புதுப்பித்துக் கட்டப்பட்டது சேதுபதிகளால்.

கோவில் மூன்றாம் சுற்றுப்பிரகாரம் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது..

கி.பி. 1480 இல் வங்கக் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு மிகப் பயங்கரமான புயலாக வீசியது. அதன் காரணமாக இராமநாதபுரத்துடன் இணைந்திருந்த இராமமேச்சுவரம் சிறு தீவு ஆனது.

1964 திசம்பர் 23 இல் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் இராமேச்சுவரத்துடன் இணைந்திருந்த தனுக்கோடி துண்டிக்கப் பட்டது. பாம்பன் பாலமும் சேதமானது.