அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ஆறறிவு!

அறிவு - புல்,மரம்,செடி - ஸ்பரிசம் (தொடுவது)

அறிவு - சிப்பி,சங்கு - ஸ்பரிசம்,ரசம் (தொடுதல்,சுவை)

அறிவு - கறையான்,எறும்பு - ஸ்பரிசம்,ரசம்,கந்தம்(தொடுதல்,சுவை,நாற்றம்)

அறிவு - தும்பி,வண்டு -ஸ்பரிசம், ரசம்,கந்தம்,ரூபம்(தொடுதல்,சுவை,நாற்றம்,உருவம்)

அறிவு - பறவை,மிருகம் - ஸ்பரிசம், ரசம்,கந்தம்,ரூபம்,சப்தம் (தொடுதல்,சுவை,நாற்றம்,உருவம்,ஒலி)

அறிவு - பறவை,மிருகம் - ஸ்பரிசம், ரசம்,கந்தம்,ரூபம்,சப்தம், ஞானம்(தொடுதல்,சுவை,நாற்றம்,உருவம்,ஒலி)

நினைத்துப்பார்க்கிறேன்

விமான டிக்கெட் விலை 50 விழுக்காடு குறைந்துள்ளது (செய்தி)
45 ஆண்டுகளுக்கு முன் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது பேருந்தில் நகரத்திற்கு மளிகைஜமான்கள் வாங்க 20 கி.மீ. நடந்து சென்று வாங்கிவருவார்கள் கா ரணம் பேருந்து வசதியில்லை சாலை வசதியும் இல்லை அப்படியிருந்தாலும் பேரூந்துக்குக் கொடும் காசில் சில ஜாமா ன்களை வாங்கிவிடலாம் என்று. மூன்று மாதங்களுக்குத்தேவையான ஜாமான்களை வாங்கிவந்து விடுவா ர்கள்.
அன்று சொல்லுவார்கள் வேட்டி கிளிந்தால் துண்டு, துண்டு கிளிந்தா ல் கோவணம் என்று எதையுமே வீணாக்காத காலம் அந்தகாலம் தோட்டத்தில் கத்தரிக்காய் மிஞ்சினால் கத்தரிவத்தல், கொத்தவரை மிஞ்சினால் கொத்தவரை வத்தல் ஆட்டுக்கறிமிஞ்சினால் உப்புக்கண்டம், குளத்தில் மின் பிடித்து அது மிஞ்சினால் கருவாடு, மாங்காய் மீதமிருந்தால் மாவத்தல், இந்த வத்தக்குளம்பே தனிருசியாக இருக்கும் . எந்த பொருளையும் வீனாக்கமாட்டார்கள். இன்னொரு செய்தி நெல்லை மண்தரையில் வீட்டினுல் குழி வெட்டி அதில் தொம்பை என்ற மட்பாண்டத்தை வைத்து பாதுகாத்து வைப்பர்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எங்கள் ஊரில் ஒரு இணத்தவர்கள் பெரும்பாலும் வெறும் கோவணத்துடம் மட்டுமே சுற்றித்திரிவர் (நரிக்குறவர் இல்லை) 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவருக்கே 2 வேட்டி சட்டைதான் இருக்கும் இன்னும் சொ ல்லப்போனால் சட்டைபோடாத ஆசாமிகளே அதிகம். ஆனால் இவர்களி டம் பெரும்பாலும் ஏமாற்று வேலை இருக்காது.

உங்கள் ENNAR வளரும்