அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர்

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,'கம்பீரமான நீதிபதி' என்று பெயரெடுத்தவர்.

தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர்.

ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி வந்தார். "அவசர விஷயம். முதல்வர் பக்தவச்சலம் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னார்" என்றார். போனேன்,"முதுகுளத்தூர் வழக்குக்கு அரசு வக்கீலாக போக எல்லாரும் பயப்படறாங்க நீங்தான் ஆஜராகணும்னு காமராஜர் விரும்பறார்" என்றார்.


சரின்னு சொல்லி வந்துட்டேன். 'என்னிக்கோ போகப்போற உயிர் தானே'னு நெனச்சிட்டே, வழக்கு நடக்கும் புதுக்கோட்டைக்கு போய் இறங்கினேன். சாயந்திர நேரம் போலீஸ் பாதுகாப்போடு வாக்கிங் போனேன். எதிரே இருநூறு, முன்னூறு பேரு கூட்டமா வந்தாங்க நடக்கிறது நடக்கட்டும்'னு நெனச்சு. நடந்தேன்.


அப்போது, சுமார் எழுபது வழக்குகள்ல கைதாகி ஆயிரத்து 200 பேர். சிறையில் இருந்தாங்க. அவங்கலோட உறவினர்கள்தான் என் எதிரே வந்தவங்க அருகே வந்ததும் தலைக்கு மேல கைய தூக்கி கும்பிட்டாங்க.


"அரசு வக்கீலா நீங்க வந்திருக்கிறதா சொன்னாங்க, கைதானவங்கள்ல தப்பு செய்தவங்களும் இருக்காங்க, தப்பு செய்யாதவங்களும் இருக்காங்க நீதி தர்மத்துப்படி செய்யுங்கய்யா..." என்று கதறினார்கள், வெட்டிடுவாங்க. .குத்திடுவாங்கன்னு, யாரைச் சொன்னாங்களோ, அவங்கதான் என்னை வீடு வரை கொண்டுவந்து விட்டுட்டுப்போனாங்க.


மறுநாள் விசாரணை குற்றவாளிகளோடு சேர்த்து தேவரையும் நிற்க வைத்திருந்தார்கள். பதறிவிட்டேன். அவருக்கு நாற்காலி கொடுக்கச் சொன்னேன். 'நாற்காலி இல்லை' என்றார்கள். என் நாற்காலியை தருவதாக சொன்னேன். கோர்ட் ஆடிப்போய்விட்டது.


நடப்பதை சலம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் தேவர் பேச்சால் போர் முழக்கம் செய்யக்கூடிய அவர் கோர்ட்டுக்கு கொடுத்த மரியதை இருக்கிறதே.... எந்த சத்தமும் ரியாக்ஷனும் இல்லாமல் யோகம் பண்றது மாதிரி உட்கார்ந்திருப்பார். காலையில் வந்தவர், மாலையில் கோர்ட முடியும்போதுதான் எழுவார் மதியம் சாப்பிடக்கூட போகமாட்டார். இது இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.

கடைசியில் தீர்ப்பில் அவர் விடுதலையாகிட்டார். தீர்ப்பு வந்த அன்றும் கூட அவர் சந்தோஷமடையவில்லை, கொண்டாடவில்லை. இந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது."

என தனது பேட்டியில் கூறியுள்ளார்.


லண்டனில் குண்டு வெடிப்பு


லண்டனில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன

இந்த நிலை நீடித்தால் நிலமை விபரீதமாகவல்லவா போகும்; உலகத்தில் உள்ள முஸ்லீம் கள் தனித்து விடப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி நல்ல முஸ்லீம் நண்பரைக்கூட சந்தேக கண்கொண்டல்லவா பார்க்கத்தோன்றும்.

அந்த காலத்தில் இப்படித் தான் ஆதிக்க வெறிகொண்டு இந்துக்கள் கோயில்களை இந்தியாவில் அழித்தனர் இன்று அப்பாவி மக்களல்லவா பாதிக்கப்படுகின்றனர்.
இது வினாசகால விபரீத புத்தி.

என்று தனியும் இந்த பயங்கரவாதம்

தமிழ் மக்கள்


பழந் தமிழ் மக்கள்




மிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந் தனரென்றும் , பின்பு இந்தியாவிற்குப் வெளியே வடக்கிலுள்ள நாடுகளிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவுட்புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவினரென்றும், அன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அங்ஙனமே இந்நாட்டிற் புகுந்து பரவலுற்றனரென்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இது பற்றி எத்தனையே வகையான கொள்கைகள் உண்டு. 'ஆயிரத்தி எண்ணூறு ஆண்டுகளின் முந்ததைய தமிழர்' என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதிய அறிஞர் வி. கனகசபைப் பிள்ளை யவர்கள் இந்தியாவில் இருந்த பழைய மக்களைப் பற்றிப் பெரிரும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர்.

அவைகளை பிறகு தொர்கிறேன்



தாஜ்மகால் யாருடையது

தாஜ்மகால் யார் செர்த்து என்ற தலைப்பில் திருச்சி டி.கே.எஸ் .கவிதா எழுதிய கடிதத்தை தினமலரில் பார்த்தேன் .


அவர்,"சில இஸ்லாமிய அமைப்புகள் தாஜ்மகாலை தங்கள் உரிமை என்று சொந்தம் கொண்டாட ஆரம்பிதுள்ளன. யார் சொத்தை யார் உரிமை கொண்டாடுவது?


தாஜ்மகாலைக் கட்டத் தீர்மானித்தது வேண்டுமானால் முகலாய மன்னனான ஷாஜகானாக இருக்கலாம் அதைக் கட்ட செலவு செய்யப்பட்ட பணம் அவன் உழைத்து சம்பாதித்த பணமா, அல்லது அவனது பாட்டன் சொத்தா? அதைக் கட்டுவதற்கான உடலுழைப்பை அளித்தது அவனது ரத்தபந்தமா?


ஒண்டவந்த ஒட்டகம் வீட்டையே ஆக்கிரமித்த கதையாக பாரதத்தில் புகுந்து ஆதிக்க ஆட்சியை நடத்திய முகலாயனான ஷாஜகான், இங்கிருந்த மக்களை அநியாயமாகக் கொள்ளையடித்து அராஜகமாக மிரட்டி கட்டப்பட்டுள்ளதுதான் தாஜ்மகால்.


மன்னராட்சிக்கு முடிவுகட்டப்பட்டு மக்களாட்சி வந்தபிறகு. அந்த சொத்துகள் எல்லாம் அரசின் சொத்துகளாக. மாறிவிட்டன தாஜ்மகாலும் அப்படித்தான் பிறகு எப்படி அதில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு உரிமை வந்தது?


இந்தப் பிரச்சனையைக் கோர்ட் படியேற்றியதே தவறு தாஜ்மகால் இந்திய அரசின் சொத்து என்று ஒரு அரசாணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட்டு இந்த விவஸ்தை கெட்ட உரிமை கோரலுக்கு நிரந்தர முடிவுகட்டவேண்டும்.


தாஜ்மகால் சர்ச்சையை அரசாணையால் நிறுத்தாவிட்டால், செங்கோட்டை போன்ற வற்றையும் தங்கள் சொத்து என்று சில கூட்டங்கள் உரிமைகோரிவிடும். உஷாராக., உறுதியாக செயல்படட்டும் அரசு!" எனக்கூறியுள்ளார்.

தாஜ்மகால் கட்டப்பட்டுள்ள இடத்தில் சிவன்கேவில் இருந்ததாக ஒரு வலை தளத்தில் பார்த்தேன் .


சாலைகள் அமைத்து மரங்களை நட்டவர் அசோகர் எனவே புத்தமதத்தினர் சாலைகளும் மரங்களும் தங்களது எனவும் கேட்டுவிடப் போகிறார்கள்!!!.


நான்கு பேர் சேர்ந்து ஒரு சின்ன வேப்பமரம் வைத்து அதில் சிறிய கட்டிடம் கட்டி கோவிலாக்கி ஒரு உண்டியல் வைத்தால் உடனே அறநிலயத்துறை அங்கு வந்து விடும்

கோடி கோடி யாய் சம்பாதிக்கும் முஸ்லீம் இடமோ , கிறித்தவரிடமோ போகாது. ஏன் இப்படி?


வெள்ளையராட்சியால் ஏற்பட்ட நன்மை இது தான் மன்னர்களை நீக்கி மக்களாட்சி அமைவதற்கு வழிவகுத்தது.


இல்லையென்றால் திருச்சியில் ஒரு மன்னன் தஞ்சையில் ஒரு மன்னன் என ஊருக்கொரு ராஜா இருந்திருப்பார் நாடு விளங்கியிருக்கும் .


நம்மை பல ஆண்டுகள் வெள்ளையர் ஆண்டாலும் ஒற்றுமையை ஏற்படுத்திவிட்டு சென்றான். united states of India .


என்னார்


காவிரி தண்ணீர்

கொள்ளிடத்தில் ஏழு கதவணைகள்


தமிழ் நாடு ஆண்டு தோறும் தண்ணீர்ப் பற்றாக் குறையினால் பரிதவித்து வருகிறது. ஜீவ நதியாக விளங்கிய காவிரி வறண்டு விட்டது. கர்நாடக மாநிலம் தண்ணீர் விட மாட்டேன் என்று முரட்டுப் பிடிவதாம் பிடித்து வருகிறது. நடுவர் மன்றம் சொன்னாலும், உச்ச நீதிமன்றம் சொன்னாலும் பாரதப் பிரதமரே சொன்னாலும் கீழ்ப்படிய மாட்டேன் என்று கூறுவது முரட்டுப் பிடிவதாம் தானே! அம்மாநிலத்தினை கீழ்ப்படிய வைப்பதற்கு பலமான மத்திய அரசு இல்லை.


இப்போது கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு மழை பெய்கிறதோ, அந்த அளவுக்கு மேலேயே பயன்படுத்தக்கூடிய விளைநிலங்களை அது தாயர் செய்து விட்டது. எனவே கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வரும் என்று நாம் எதிர் பார்ப்பதற்கு இடமில்லை . அவர்கள் பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல், பயன்படுத் தமுடியாமல் வழிந்து வரும் தண்ணீர்தான் நமக்கு வந்து சேரும். கடந்த சில ஆண்டுகளாகவே அப்படித் தான் நடந்து வருகிறது. கர்டநாடகத்திற்கு வடிகால் பூமியாகத்தான் தமிழ்நாடு விளங்கிவருகிறது.


இயற்கையின் பாரபட்சம் காவிரிப் படுகையின் மொத்த நிலப்பரப்பில் 42.2 சதவீதம் கர்நாடகத்திலும், 3.5 சதவீதம் கேரளத்திலும் , மீதி 54.3 சதவீதம் தமிழ் நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் உள்ளது ஆனால் இற்கை அமைப்பினால் கர்நாடக, கேரள மாநிலங்களிலும் சராசரி ஆண்டு தோறும் 3015 மி.மீ. மழையும் தமிழ் நாட்டில் சராசரி 981 மி.மீ. மழையும் தான் பொழிகிறது. இதனால் கர்நாடக கேரளத்தில் பெய்யும் மழை அங்கு பயன் படுத்தாமையினால் தமிழ் நாட்டுக்கு ஓடி வந்து இங்கு ஏராளமான விளைநிலங்களுப் பயன் படுகிறது.


இது ஆயிரகணக்கான ஆண்டுகளாக நடந்து வந்தது . கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டிய கல்லணைதான் உலகிலேயே முதன் முதலாக கட்டப்பட்ட பாசன அமைப்பாகும் காவிரியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பெரும்பகுதியை தமிழ் நாடு தான் பயன் படுத்திவந்தது. 1971 – 1972 வரை இந்த நிலை நீடித்தது அந்த ஆண்டு கிடைத்த நீரினைக் கொண்டு தமிழ் நாடடில் 28.2 இலட்சம் ஏக்கர் பாசனம் நடந்தது. கர்நாடகத்தில் 6.68 இலட்சம் ஏக்கர் தான், கேரளத்தில் வெறும் 6300 ஏக்கர் மட்டுமே. நாளாவட்டத்தில் இந்த நிலை மாறிவிட்டது. எங்கள் மாநிலத்தில் பெய்யும் மழை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறிக்கொண்டு கர்நாடகம் அதன் பாசன பரப்பினை 19.6 லட்சம் ஏக்கருக்கு அதிகரித்து விட்டது. அதற்கு மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. காவிரி நடுவர் நீதி மன்றம் கர்நாடகத்தில் காவிரி பாசனம் 11.2 இலட்சம் ஏக்கருக்குமேல் அதிகரிக்கக்கூடாது என்று 1991ல் ஆணை பிறப்பித்தது.


கர்நாடகத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு 205 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்றும் இடைக்கால ஆணையிட்டது. கர்நாடகம் எதையும் பின்பற்றவில்லை. இனிமேல் பின்பற்றும் என்ற நம்பிக்கையும் இல்லை.


எனவே தமிழ் நாட்டில் பெய்யும் மழையினைக் கொண்டு தான் நாம் பிழைக்க வேண்டும் என்ற நிலமை உருவாகி வருகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பல நூற்றாண்டுகளாக காவிரி நீரைப்பயன்படுத்தி வந்த நமக்கு முன்னுரிமை உண்டு. நமது தேவைகளை பூர்த்தி செய்து விட்டுதான் புதிய பயன் பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சர்வதேச சட்டம். ஆனால் எதற்கும் கட்டுப்படாத கர்நாடத்தை என்ன செய்வது?.


தமிழ் நாட்டில் நதிகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதனையும் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதனையும் ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைகள் அளிப்பதற்காக நான்காண்டுகளுக்கு முன் ஒரு தொழில் நுட்பக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்கள் ஆய்வுநடத்தி அரசுக்கு ஓர் அறிக்கையளித்தது. அக்குழுவில் திரு. சி.எஸ். குப்புராஜ் அவர்கள் ஒரு அங்கத்தினராக இருந்தார்கள்.


குழு அளித்த பயனுள்ள பரிந்துரைகளில் ஒன்று கொள்ளிடத்தில் மேலணைக்கும் அணைக்கரைக்கும் (ஒரு ஊரின் பெயர்)இடையே ஏழு கதவணைகள் அமைக்ப்படவேண்டும் என்பது . இதனால் கீழ் அணை என்று கூறப்படும் அணைக்கரையின் மூலமாக கடலில் கலக்கும் 100 டிஎம்சி தண்ணீரில் பெரும் பகுதியை பயன் படுத்தலாம் என்பதாகும். இந்த 100 டிஎம்சி என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.

வரும் ஆண்டுகளில் இது குறையலாம் , கர்நாடகத்தின் செயல்பாடுகளால் ! இருப்பினும் கணிசமான அளவு இந்தக் கதவணைகள் மூலமாக சேமிக்க முடியும். மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் . இந்தக் கதவணைகள் (மொத்தக் கொள்ளளவு 14.0 டிஎம்சி) காவிரி நீருக்காக மட்டுமல்ல கொள்ளிடத்தின் வடபால் உள்ள நீர்பிடிப்பகுதியில் இருந்து கிடைக்கும் நீருக்காகவும் கூடத்தான்.


தமிழ் நாட்டில் பெய்யும் ஒவ்வொரு துளி மழைநீரினையும் சேமிக்க வேண்டடிய நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே தான் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. .


இந்தக்கதவணைகள் கட்டப்படவேண்டிய இடங்களும் மற்ற விபரங்களும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தோராய மதிப்பீடு ரூ.250 கோடி. பயன்கள் அளவிடமுடியதன. முக்கியமானது கொள்ளிடத்தின் இருகரைகளிலும் நூரு கி.மீ.வரை நிலத்தடி நீர் மட்டம் உயரும் .


அன்மைக்காலத்தில் தமிழ் நாடு அரசு வெளியிட்டு பின்னர் கிராம மக்களின் எதிர்ப்பினால் வாபஸ் வாங்கப்பட்ட வீரானம் விரிவாக்கத்திட்டதுடன் இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம் .


தலைமைச் செயலகத்தில் வழக்கம் போல் தூசி படிந்து கொண்டிருக்கும் சி.எஸ். குப்புராஜ் அவர்களது குழுவின் அறிக்கையினை எடுத்து, தூசி தட்டி, இந்த ஒரு பரிந்துரையினையாவது நிறைவேற்றினால், மக்களுக்கு பெரும் பலனளிக்கும்.

கடலில் கலந்து வீனாகும் தண்ணீர் ஓரளவு சேமிக்கப்படும்.


சேது சமத்திரத்திட்டத்திற்கு 2400 கோடி நம் கொள்ளிடத்திற்கு 240 கோடி

கடலில் 2400 கோடியைப் போட வேண்டாம் எனச் சொல்லவில்லை ஆற்றிலும் ஒரு 240 கோடியைப் போட்டல் திருமானூர் தண்ணீர் சென்னைக்கு தங்கு தடையின்றி கொண்டு செல்லலாமே.

எந்த பிதிபலனும் எதிர் பார்க்காத பெருந்தலைவர் இருந்தால் இது நடக்கலாம். ஆட்சியில் இருந்தால்தான் !! ம்...ஆகட்டும் ..பா..ர்..க்.....லா...ம்..ம்..ம்.


வெவசாயி பெருமூச்சு இது தான் என்ன பன்றது


குற்றம் மாணவர்களை அரசியல் கூட்டத்ததிற்கு

பள்ளி மாணவர்களை தற்காலிக ஆசிரியர் மூலும் அனுப்பியது தவறதான்

மகாத்மா காந்தி

"இந்தியா இப்பொழுது உருவாகி வருவதைப் பார்தால் எனக்கு அதில் இடங்கிடையாது என்று தோன்றுகிறது 125 ஆண்டுகள் உயிரோடு இருக்க வேண்டும் என்று என்னத்தை விட்டு விட்டேன். இன்னும் ஓர் ஆண்டோ இரண்டு ஆண்டோ இருக்கலாம்.

காந்தி 'அரிசன் ' 15-06-47

பாரதியார் பாடல்

நொந்த புண்ணைக் குத்துவதில் பயன் ஒன்றும் மில்லை
நோவாமலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநூஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகலும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்

சுப்ரமணியபாரதி: