அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

முத்துராமலிங்கதேவர் மரணம்

அனைத்துக்கட்சியினர் அஞ்சலி
தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56_வது வயதில் காலமானார்.
கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார்.
மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.
உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார்.
கடைசி விருப்பம்
"என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது.
தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம், 30_ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக் கான மக்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அனுதாபக் கூட்டம்
அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள். அண்ணா பேசுகையில் கூறியதாவது:_
"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர்.
எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல் லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார்.
ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். "உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட் சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்" என்று பதில் அளித்தேன்."
இவ்வாறு அண்ணா கூறினார்.
காமராஜர்
தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், "தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரி யத்துடன் சொல்லக்கூடியவர்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், "நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்" என்று கூறியிருந்தார்.
வாழ்க்கைக்குறிப்பு
முத்துராமலிங்கதேவர், 1908_ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30_ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் _ இந்திராணி அம்மாள்.
பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார்.
1927_ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார்.
வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார். அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார்.
1948_ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு "பிளாக்" கட்சியில் சேர்ந்தார்.
சட்டசபை வாழ்க்கை
முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார்.
1937_ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப் பட்டார்.
பிறகு 1947_ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1952_ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளு மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிறகு 1957_ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத் துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்தார்.
கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத் துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
நேதாஜியை கவர்ந்தவர்
நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர்.
1939_ம் ஆண்டில் அகில இந் திய காங்கிரஸ் கட்சித் தலைவ ராக நேதாஜி தேர்ந்து எடுக்கப் பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.
கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார்.
ராமநாதபுரம் கலவரம்
1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது. அப்போது ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இமானுவேல் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், முத்துராம லிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட் டார்.
பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழி லும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர். தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர் களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000.
ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார். 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.
பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.

இந்நாட்டிற்ககா வாழ்க்கையில் நான்கில் ஒரு பங்கை சிறையில் கழித்தவர்

தேவர் ஜெயந்தி

தேவர் திருமகன் 30-10-1908 அன்று பிறந்தார்
தேவர் திருமனார் பிறவிலேயே புத்தர், வீரர் விவேகானந்தர், அருள்வள்ளல் இராமலிங்கர், இவர்களைப்போல இளமையிலேயே மண்ணாசை,பொன்னாசை, பெண்ணாசையைத் துறந்தார். தன் உடல், பொருள், ஆவியை இந்நாட்டிற்கே அளித்தார். தன் மூச்செல்லாம், பேச்செல்லாம் இந்தியத் திருநாடு! அதன் விடுதலை! விடுதலை என்றே வாழ்ந்தார்! அதற்காக அவர் சிந்திய ரத்தம் செய்த தியாகம் ஆயிரம்! ஆயிரம்! அவர் இம்மண்ணில்வாழ்ந்த நாட்கள் 20,075. சிறையில் இருந்த நாட்கள் 4,000. அந்த விடுதலை வேந்தர் இந்திய நாட்டின் விடுதலைக்காகச்
சிறை சென்றார்! விடுதலை பெற்ற இந்தியத் திருநாட்டில் இந்தியனின் நல்வாழ்விற்காக வாழ்ந்தார் தமிழ்ப் பண்பாட்டிற்காக வாழ்ந்தார், தெய்வீகத்திற்காக வாழ்ந்தார் 30-10-1963ல் இறைவனடி சேர்ந்தார் ஆம் இந்நாட்டில் கங்கையும் யமுனையும் பாயும் வரை தேவர் வாழ்வார் இம்மண்ணில் இமயமும் குமரியும் நிலைத்து நிற்கும் வரை தேவர் பெருமானின் புகழ் நிலைத்து நிற்கும்.
வாழ்க தேவர்! வளர்க அவர்புகழ்!! ஓங்குக உலகம்

மன்னர் கோட்டை மாட்டுத் தொழுவம்

சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து வீரமுழக்கமிட்ட மருது சகோதரர்களின் கோட்டை தற்போது அரசின் பாராமுகத்தால் மாட்டுத் தொழுவமாக காட்சியளிக்கிறது.
1731ம் ஆண்டு ராமநாதபுரம் சீமை தஞ்சை மராட்டிய மன்னர்களால் சிவகங்கை, ராமநாதபுரம் என இரும பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மறவர் இன சிற்றரசர்கள் வசம் ஒப்படைக்கபட்டது. சிவகங்கை பகுதியை ஆண்ட சசிவர்ண தேவர் வம்சத்தவரால் அரண்சிறுவயல் என்ற ஊரில் அரண்மையும், பாண்டியர்மதிற்சுவரும் கட்டப்பட்டது.
18ம் நூற்றாண்டில் மருது சகோதரர்கள் இந்த அரண்சிறுவயல் அரண்மனையில் தங்கி ஆட்சி புரிந்ததோடு வெள்ளையர்களை தீரமுடன் எதிர்த்தனர். வெள்ளையர்க்களை எதிர்க்க படை பயிற்சி அளித்தனர். கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததால் மருது சகோதரர்களை வெள்ளையர்கள் தந்திரமாக கைது செய்து புளியமரத்தில் தூக்கிலிட்டனர்.
மதுருபாண்டியர்கள் ஆண்டதால் அரண்சிறுவயல் அரண்மனை மருதுபாண்டியர் கோட்டை என அழைக்கப்பட்ட தோடு இந்த ஊருக்கு அரண்மனை சிறுவயல் என்ற பெயரும் ஏற்பட்டது.
அரண்சிறுவயலில்உள்ள மருது பாண்டியர் கோட்டை பின்னர் மருது சகோதரர்களின் நினைவுச் சின்னமாக்கப்பட்டது. மருதுபாண்டியர் கோட்டை மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைமற்றும் மாநில அரசுகளின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது இந்த மருதுபாண்டியர் நினைவிடத்தின் கதவுகளின் புட்டை உடைத்து சிலர் நினைவிடத்தை மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர். கோட்டையின் உட்புறத்தில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் அடைக்கப்பட்டுள்ளன மேலும் சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த நினைவுச் சின்னம் சிதலமைந்து வருகிறது. வெள்ளையர்களை தீரமுடன் எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்களின் நினைவிடத்துக்கே இந்த கதியா!! எனக் கண்ணீர் வடிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இது இன்றைய தினமலரில் வெளியாகியது
நாட்டுக்குப்போராடிய மன்னர்களின் நினைவிடத்தை கவணிக்காத அரசையும் அங்குள்ள மக்களையும் என்னவென்று சொல்வது இந்த மாதம் 24ந் தேதி தான் அம்மன்னர்களின் நினைவு நாளாகும். நாட்டுக்கு உழைத்த அம்மன்னர்களின் வரலாற்றைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.

நாளை அபூர்வ சந்திர கிரகணம்

180 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை அபூர்வ சந்திர கிரகணம்
சென்னை, அக். 16-
வழக்கமாக சந்திரகிரகண மும், சூரிய கிரகணமும் குறைந்தது ஆறு மாத இடைவெளியில் வரும். ஆனால் தற்போது ஒரே மாதத்தில் சூரிய, சந்திர கிரகணங்கள் வருவது ஜோதிட, விஞ்ஞான ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. நாளை மாலை சந்திரக கிரகணம் நிகழவிருக்கிறது. இவ்வாறு இரண்டு கிரகணங்கள் ஒரே மாதத்தில் இதற்கு முன் 180 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இவ்வாறு ஒரே மாதத்தில் இரண்டு கிரக ணங்கள் நிகழ்வதற்கு மலமாத விளைவு எனக் கூறுவர்.
பொதுவாக இந்த மல மாத விளைவு பலநூறு ஆண்டு களுக்கு ஒரு முறையே நிகழும் அபூர்வ நிகழ்வாகும்.
நாளை சந்திர கிரகணம் ரேவதி நட்சத்திரத்தில் மீனம், மேஷ ராசியில் 5-வது ஜாமத்தில் நிகழ்கிறது. நாளை மாலை 5.04 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் 5.35 மணிக்கு மத்திய நிலையை அடைகிறது. 6.03 மணிக்கு நிறைவு பெறுகிறது. சந்திரனுக்கு உரிய கிழமையான திங்கட்கிழமை இது நிகழ்வது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.
வழக்கமாக கிரகண காலங்கள் கோவில்களில் நடை சாத்துவது வழக்கம். கிரகணத்தின் போது பக்தர் களின் மனநிலை வழிபாடு செய்வதற்குரிய ஒரு மித்த தெய்வீக சிந்தனையை அடை வது கடினம். அவர்களின் மனநிலையில் கிரகண நேரத்தின் போது மாற்றங்கள் ஏற்படும். எனவே இந்த சூழ்நிலையோடு பக்தர்கள் ஆலயங்களுக்கு வந்து ஆலய சுத்தம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும் கிரகண கதிர் வீச்சுகளால் கோவில் களில் உள்ள விக்ரகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற் காகவும் கிரகண நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்ததும் அது மீண்டும் திறக்கப்படும்.
மேலும் கிரகண காலங்களில் ஆலயங்கள் மிகவும் தூய்மை படுத்தப்படுகின்றன. மடப் பள்ளிகளில் உள்ள உணவை காலி செய்து அந்த அறை நன்கு சுத்தப்படுத்தப்பட்டு கிரகணம் முடிந்ததும் புதிதாக அக்னி மூட்டி உணவு தயாரிக்கப்பட்டு நிவேதனத்திற்கு பயன்படுத் தப்படுகிறது.
நாளை அபூர்வ சந்திரக் கிரணம் நிகழ்வதால் ஆகம விதிப்படி கோவில்களில் நடை சாத்தும் ஐதீகம்.
தமிழ் நாடெங்கும் உள்ள முக்கிய கோவில் களில் முக்கியமாக கடைபிடிக் கப்படும் என்றும் எதிர் பார்க் கப்படுகிறது.
திருப்பதி கோவிலில் நாளை கிரகணத்தை முன்னிட்டு நடை சாற்றப்படுகிறது.
நாளை மதியம் 12 மணியிலிருந்த மாலை 6.30 மணி வரை சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாற்றப்படுகிறது.
இங்கு நாளை மாலை கல்யாண உத்சவம் மாலை நேர பூஜைகளும் ரத்து செய் யப்படுகின்றன. இந்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய கோவிலான மதுரை மீனாட்சியம்மன் கோவி லிலும் நாளை சந்திர கிரகணத்தையொட்டி கோவில் நடை சாற்றப்படுகிறது.
நாளை மாலை 5.3 மணி முதல் 6.3 மணி வரை சுவாமி, அம்மன் சந்நிதிகளில் பல கணி கதவு மட்டும் சாற்றப்படுகிறது. மற்றக் கதவுகள் வழக்கம் போல திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தள்ளது.
இதே போல நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவி லிலும் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலிலும் கிரகண நேரத்தில் நடை சாற்றப்படுகிறது.
சென்னையில் பார்த்த சாரதி கோவில், கபாளீஸ்வரர் கோவில் போன்ற முக்கிய கோவில்களில் கிரகண நேரத்தில் நடை சாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களில் நாளை கிரகணநேரத்தில் நடை சாற்றப்படும் ஆகம ஐதீகம் கடைபிடிக்கப்படலாம்.
கோவில்களில் நடை சாற்றப்படுவதை யொட்டி முன்கூட்டியே வழிபாடு செய்தவற்கு பக்தர்கள் கூட்டம் முண்டியடிக்கிறது.

இது மாலை மலர் செய்தி

பழைய பஞ்சாங்கச் செய்தி
அருக்கனையும் சோமனையும் ஐம்மூன்று நாளை (நாளில்) நெருங்கி அரவமது தீண்டில் - செருக்களத்தில் மன்னர் மடிவார் மடியா விடிலங்கு அன்னம் அரிதாய் விடும்
பதினைந்து நாட்களுக்குள் சூரிய சந்திர கிரகணங்கள் வந்தால் நாட்டிற்கு நல்லதல்ல என நான் கேள்விப்பட்டிருக்கேன்

வள்ளுவரை வம்புக்கிழுத்த நாடாளுமன்ற உறுப்பினர்

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுகவின் எம்.பி எஸ்.எஸ் சந்திரன் தமிழரின் குலதெய்வமாகப் போற்றப்படும் அய்யன் வள்ளுவரையே வம்புக்கு இழுத்து வசை பாடியிருக்கிறார். அநாகரீகமாகப் பேசுவதிலும் அசிங்கமாகப் பேசுவதிலும் கைதேர்ந்த குரங்குச் சேட்டை மனிதரான இவர் அவ்வப்போது அரசியலை சாக்கடையாக்கி வரும் மனிதர்.
கீழ்கண்ட வலைதளத்தில் உள்ளது

http://www.keetru.com/literature/essays/ss_chandran.html

மருது பாண்டியர்கள்


சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.
இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.
வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர் அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர் அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர் அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.
பசும்பொன் ஆண்டுமலரிலிருந்துதொடரும் . .

வீரமும் திறமையும் வெளிப்படுதல் 2

சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்கியும் , மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார்.
பசும்பொன் ஆண்டுமலரிலிருந்து
தொடரும் . . . . . . .

மருது பாண்டியர்கள் 1

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.
ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார் மொக்கைப் பழநியப்பருடன் சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.
இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.
ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.
மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்
ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.
பசும் பொன் 30 வது அண்டுமலரிலிருந்து
தொடரும் . . . .

சொல்லின் செல்வர் சம்பத் விலகல்

தி.மு.கழகத்தை விட்டு சம்பத் விலகல் தனிக்கட்சி தொடங்கினார்

தி.மு.கழகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில், 1961_ல் ஒரு சோதனை ஏற்பட்டது.

1961 ஜனவரி 21, 22 தேதிகளில் தி.மு.க.வின் பொதுக் குழு கூட்டம் வேலூரில் நடந்தது. இதில், தி.மு.க. தலைமை மீது ஈ.வெ.கி.சம்பத் குற்றச்சாட்டுகளைக் கூறினார். தி.மு.கழகம் சட்டதிட்டங்களில் திருத்தம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார். அவரது கருத்துகளுக்கு ஆதரவு இல்லாததால், அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

உண்ணாவிரதம்

தி.மு.கழகத்தில் வன்முறை அதிகரித்து விட்ட தாகக்கூறி, சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

பெரியாரின் அண்ணன் மகனான சம்பத், பெரியாரின் திருமணத்தை எதிர்த்து திராவிடக் கழகத்திலிருந்து வெளியேறியவர். தி.மு.கழகம் உருவானது முதல், அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். சிறந்த பேச்சாளர். "சொல்லின் செல்வர்" என்று புகழ் பெற்றவர்.

எனவே, அவரை இழக்க விரும்பாத அண்ணா, உண்ணா விரதம் தொடங்கிய 23_வது நாளில் சம்பத்தை நேரில் சந்தித்து, சமா தானப்படுத்தினார். உண்ணா விரத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு, பழரசம் கொடுத் தார். பழரசம் அருந்தி சம்பத் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

புதுக்கட்சி

தி.மு.கழகத்தில் தோன்றிய புயல் அத்துடன் ஓய்ந்துவிட்டதாக அனைவரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன.  

சம்பத், திடீரென்று டெல்லிக்குச்சென்றார். அங்கிருந்து திரும்பியதும், தி.மு.கழகத்தை விட்டு விலகி, "தமிழ்த் தேசிய கட்சி" என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

கண்ணதாசனும் தி.மு.கழகத்தை விட்டு விலகி, சம்பத் கட்சியில் இணைந்தார்.





சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

முதல் தி.மு.க. மேயர் அ.பொ.அரசு 1959_ல் சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க. போட்டியிட்டது. மொத்தம் உள்ள 100 இடங்களில், 90 இடங்களுக்கு போட்டியிட்ட தி.மு.கழகம் 45 இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிட்டு 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் பெற்ற மொத்த ஓட்டுகள் 1,43,783. தி.மு.கழகம் பெற்ற ஓட்டுகள் 1,48,712.

அ.பொ.அரசு

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் தேர்தல் 24_4_1959_ல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் அ.பொ. அரசு போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜி.ராஜமன்னார் நிறுத்தப்பட்டார்.

வாக்கெடுப்பில் அ.பொ.அரசுக்கு 60 ஓட்டுகளும், ராஜமன்னாருக்கு 45 ஓட்டுகளும் கிடைத்தன.

சென்னை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயராக அ.பொ.அரசு பதவி ஏற்றார்.

ரூபாய்க்கு ஒரு படி அரிசி

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுவோம்" என்று தி.மு.கழகம் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.ஆட்சிக்கு வந்ததும், அதை அமுல் நடத்த அண்ணா நடவடிக்கை மேற்கொண்டார். "இதற்கு அதிக செலவாகும்" என்று அதிகாரிகள் கூறினார்கள். எனினும், முதல் கட்டமாக சென்னையிலும், கோவையிலும் "படி அரிசி திட்டம்" அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது.இதுபற்றி அண்ணா ஒரு கூட்டத்தில் கூறியதாவது:"இப்போது படி அரிசி திட்டத்தை அமுல் நடத்துவதால் ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவாகிறது. எல்லா மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தினால், ஆண்டுக்கு ரூ.10 கோடி செலவாகும்.இந்தத் திட்டத்தை நிறை வேற்ற உதவி செய்யும்படி, மத்திய அரசை கேட்டோம். "புது வரி போட்டுக் கொள்ளுங்கள்" என்று மத்திய அரசு கூறிவிட்டது."இதற்காக புது வரி போடமாட்டேன்" என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டேன். தமிழ் மக்கள் இப்போது இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு புது வரி பற்றி யோசிப்பது இயலாத காரியம் என்றும் தெரிவித்து விட்டோம். ராணுவத்திற்கு மத்திய அரசு ஏராளமாக செலவு செய்கிறது.  இதில் ரூ.100 கோடியை மிச்சப் படுத்தி மாநிலங்களுக்கு கொடுத்து உதவலாம். இப்படி செய்தால், அந்தந்த மாநிலங்கள் போடும் புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும்."இவ்வாறு அண்ணா கூறினார்.இராணுவத்திற்கு செலவை குறைத்தால் நாடு நாடாயிருந்திருக்காது