அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

தொல்காப்பியன்

தீராத தலைநோயால் துடித்துக்கொண்டிருந்த திரணாக்கிய முனிவரைக் காப்பாற்ற வேண்டும் என்று அகத்தியரைக கேட்டுக் கொண்டார்கள், போடாத கும்பிடெல்லாம் போட்டு பெரிய பெரிய வார்த்தைகளால் புகழ்ந்து, "நீங்கள் மனது வைத்தால் இவன் பிழைப்பான். இல்லாவிட்டால் செத்துப் போவான். இவனுக்கு நீங்கள் தான் உயிர் பிச்சை அளிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

அகத்தியர் பார்த்தார். திரணாக்கியரின் கபாலத்திற்குள் தேரை புகுந்து கொண்டிருக்கிறது. கபாலத்தைத் திறந்து தேரையை வெளியேற்றினால் தான் அவர் பிழைப்பார் என்பதைத் தெரிந்து கொண்டார். அக்காலத்திலேயே அகத்தியர் மூளை அறுவை சிகிச்சை வரை செய்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

அகத்தியர் திரணாக்கதியரின் மண்டை ஓட்டைத் திறந்தார். உள்ளே தேரை இருந்தது. அதை எடுப்பதற்காக இடுக்கியை எடுத்தார். தேரையை எடுக்க வேறு வழி இல்லை என்பதாலேயே அகத்தியர் அவ்வாறு செய்தார். ஆனால் சற்று இசகு பிசகாக இடுக்கி பட்டுவிட்டால் கூடஉடனே நோயாளி இறந்து போய்விடுவானே? தவிர அகத்தியர் இடுக்கியால் பிடிக்கும் வரை தேரை உட்கார்ந்து கொண்டா இருக்கும்?

அதைப்பற்றி யெல்லாம் யோசிக்க அகத்தியருக்கு அவகாசம் இருக்கவில்லை. ஆனால் புத்திசாலியான ஊமைச் சீடன் உடனே நிலைமையைப் புரிந்து கொண்டான். சட்டென்று அகத்தியரைத் தடுத்து விட்டான். ஓடிப்போய் ஒரு தாம்பாளத்தில் தண்ணீர் கொண்டு வந்து தேரையிடம் காட்ட அது மூளையை விட்டு தாம்பாளத் தட்டில் குதித்தது.

அகத்தியருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவும் கூறமுடியுமா? ஊமைப் பையனாகக் காட்சியளித்த அந்தச் சீடன் எவ்வளவு மாபெரும் காரியத்தைச் சாதித்து விட்டான்! நோயாளியின் உயிரைக் காப்பாற்றி விட்டான். தன்னுடைய மானத்தையும் காப்பாற்றி விட்டான். அது முதல் அந்தச் சீடனுக்குத் தேரையர் என்ற பெயரே நிலைத்து விட்டது.

அந்த தலைநோய் நீங்கிய திணாக்கிய முனிவர் தான் பின்னாளில் அகத்தியரின் மாணக்கனாகி தொல்காப்பியம் என்ற சிறந்த இலக்கண நூலை இயற்றிய தொல்காப்பியர்

விடைபெறுகிறேன்

அன்பு நன்நெஞ்சங்களே !



ந்த நாள் இனியநாளாக இருக்கட்டும் என்று சொல்வது போல இந்த வாரம் இனிய வாரமாக இருக்க வேண்டும் என்று தான் தொகுத்தேன் அதிகமாக எழுதாமல் குறைவாகவே எழுதிஉங்கள் நல்ல நேரத்தை நான் கெடுக்காமல் இருந்தேன். என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ் மண நிர்வாகிகளுக்கு நன்றியையும் எனது ஆக்கங்களை படித்து விமர்சித்த நல்ல உள்ளங்களுக்கும் என நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.




எனது ஊர் துவாகுடி என்கிற துழாய்குடி இது திருச்சி தஞ்சைக்கு இடையே திருச்சியிலிருந்து 16 கிமீ. யில் உள்ளது இங்கு தான் பாதர மிகு மின் நிலையம் உள்ளது பல சிறு தொழிற்சாலைகளும் உண்டு.


பல அண்டுகளுக்கு முன்னர் புஞ்சைகாடுகளும் வனங்களும் நிரைந்த ஊர் தான்; விவசாயம் தான் முக்கிய தொழில் பல ஏறிகள் உண்டு மழைபெய்தால்தான் விவசாயம் நல்ல மழைபெய்தால் நஞ்சை சிறு மழைபெய்தால் புஞ்சை .மக்கள் சந்தோசமாக வாழ்கையை ஓட்டி வந்தனர்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இரணுமுகாம் இங்கும் வைத்திருந்தனர் மக்களின் புஞ்சை நிலங்களில் அதற்கு குத்தகையாக ஏக்கருக்கு ஒரு அணா என நினைக்கிறேன் அது சரியாகத் தெரியவில்லை. அவர்கள் குளிப்பதற்கு ஒரு மூங்கிலை இரண்டாகப் பிளந்து பிஸ்கட் டின் இரண்டிலும் தண்ணீர் எடுத்து காவடி போல கொண்டு கொடுப்பர் ஒரு டின் தண்ணீருக்க அரையணா காசு. கிணருகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கொடுத்து சம்பாதித்து வந்தனர். ஆனால் அன்று இருந்து வெள்ளைய இராணுவத்தினர் ரொப்பவும் கெளரவமாக நடந்தனர். ஒரு முறை கிராமத்திற்குள் சில படையினர் வர மக்கள் பயந்து வீட்டிற்குள் சென்று விட்டனர். பட்டாளத்தான் வருகிறான் வந்துட்டான் பட்டாளத்தான் என சத்தம் போட ஆங்கிலம் தெரிந்தவர்கள் வந்து,' இங்கு கிராமத்திற்குள் நீங்கள் வரக்கூடாது' என எடுத்துச் சொல்லவும் அவர்கள் சென்று விட்டனர். அதற்கு பிறகு யாரும் வரவில்லை.இது நான் கேள்விப்பட்டது.


எங்கள் கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் அய்யனார், செல்லாயி அம்மனுக்கு தேர் திருவிழா எடுத்தனர் ஒரு மாதம் நடைபெற்றது. அந்த காலத்தில் இருந்தது போல் இல்லை யென்றாலும் பராவயில்லை.


துப்பாக்கித் தொழிற்சாலைக்கும் பரதமிகுமின் நிலையத்திற்கம் இடையே கட்டளைக் கால்வாய் வெட்டப்பட்டு குளங்களுக்க தண்ணீர் கொண்டு வரப்பட்டது இது பெருந்தலைவரின் சாதணைதான். இதற்கு பிறகு தான் மழையில்லையென்றாலும் நஞ்சை சாகுபடி செய்யப்பட்டது அதன் மதிப்பீடு என்ன வென்று தெரியவில்லை ஆனால் 20 ஆண்டுகளுக்கு ஏக்கருக்கு 11 ரூபாய் நாங்கள் அரசுக்கு பெட்டர்மெண்ட் லெவியாக செலுத்தி வந்தோம் அதாவது விவசாயத்திற்கு அரசு செலவழித்த பணத்தை எங்களிடம் வசூல் செய்து விடும்.

எங்கள் ஊருக்கும் தெற்கு பக்கத்தில் உள்ளவர்கள் (திருடர்கள்) இன்று BHEL இருக்கும் பக்கத்தில் இருந்து ஐடிஐ இருக்கும் இடம் அதாவது அன்று 1930 என நினைக்கிறேன் மூதரிஞர் ராஜாஜி திறந்து வைத்து வானொலி நிலையம் இருந்த இடம் வரை கோட்டைக்குச் சென்று நெல் விற்றுவிட்டு வரும் விவசாயிகள் வரிசையாக ஐந்து வண்டிக்கு மேல் வரும் முதல் வண்டிகாரர் தூங்கமல் வண்டியை ஓட்டிவருவார் மற்ற வண்டிகாரர்கள் வண்டியில் படுத்து தூங்கிக் கொண்டு வருவார்கள். கடைசி வணிடியின் நுகத்தடியை இருவர் பிடித்து இழுத்துக்கொண்டு போவார்கள் மற்ற இரண்டு திருடர்களும் இரண்டு மாட்டையும் அவிழ்த்து பிடித்துக்கொண்டு காட்டு வழியே சென்றுவிடுவார்கள் சற்று தூரம்வரை அவர்கள் வண்டியை இழுத்துக் கொண்டு சென்று கீழே வைத்துவிட்டு இவர்களும் காட்டில் இறங்கிவிடுவர். அந்த இடம் வரும்போது மட்டும் யாரும் தூங்கக் கூடாது என வருவார்கள். அந்த காலங்களில் போக்கு வரத்து அதிகம் இல்லை எனக்கு தெரிந்தே 15முதல் 30 நிமிடம் வரை மோட்டார் வண்டிகள் வராது ட்ரங்ரோடுதான். அப்பொழுது அதிக வேகமாச் செல்லும் போரூந்து express bus அதைத்தான் கலைஞர் த்துரிதவண்டி என மொழி மாற்றி பிறகு அது தமிழ் மொழியில்லை என சொன்னபிறகு விறைவு வண்டி என மாற்றினார். அந்த வண்டி வந்தால் நாங்கள் எல்லாம் ரோட்டில் சென்றால் சற்று தள்ளிப் போய்விடுவோம். கோகுழ் கூட தனது கதையில் எங்கள் ஊரை மையமாக வைத்து ராஜகேசரி என்ற கதையை எழுதியுள்ளார்.

எங்கள் ஊருக்கு தவடி என்றும் ஒரு பெயர் உண்டு இப்பெயரில் இலங்கையிலும் ஒரு ஊர் உண்டு. தாவடி என எதற்க பெயர் வந்தது என்று தெரியவில்லை ஆனால் அதன் விளக்கம் சண்டைநடக்கும் இடம் சைனியத்தை நிருத்தி வைத்த இடம் என அர்த்தமுண்டு. துழாய்க்குடி என்றும் அந்த காலத்தில் பெயர் இருந்ததாக முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூறுகிறது. துழாய் என்றால் துளசி எங்கள் ஊர் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் தலைமையாகும் அந்த காலத்தில் துளசிமாநாடு என இந்த பகுதிக்கு வைத்து துளசிமாநாட்டுக்குத் தலைநகர் துழாய்க்குடி என வைத்து அது மாற்றமடைந்து துவாக்குடி யாக மாறிவிட்டது.

பிறகு மீதத்தை எழுதுகிறேன்.


நன்றி வணக்கம்

தங்கள்

என்னார

இலக்கியத்தில் கடவுள்

தெய்வம் உண்டு என்று வாதிப்பாரும், இல்லை என்று சாதிப்பாரும் இவ்வுலகில் எந்த நாளும் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தெய்வத்தை தெய்வத்தை முன்னிட்டே எந்த வேலையையும் தமிழ் நாட்டார் தொடங்குவார்கள். வேலை இல்லாமல் வெறுமையாய் இருக்கும் பொழுதும் சிவனே என்றிருப்பார்கள்; அல்லது தெய்வமே என்றிருப்பார்கள்; தெய்வத்திற்குரிய கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க விரும்ப மாட்டார்கள். கடவுளை நம்பினோர் கைவிடப்படார். என்பது இந்நாட்டுப்பழமொழி.

கடவுள் என்ற சொல்லாலேயே கற்றோரும் மற்றொரும் தமிழ் நாட்டில் தெய்வத்தைக் குறிக்கின்றார்கள். தெய்வத்தின் தன்மையை அச்சொல் தெளிவாகக் காட்டுகின்றது. கடந்து உள்ள பொருள் எதுவோ அது கடவளாகும் . எதைக் கடந்து உள்ள பொருள் என்று ஆராய்வோமானால் கடவுள் என்ற சொல்லின் தன்மை சிறந்து தோன்றும். பிறப்பு, இறப்பு, என்னும் இரண்டையும் கடந்த பொருள்; இவ்வாறெல்லாம் கடவுள் என்ற சொல்லின் பொருளை விரித்துரைப்பார் கற்றறிந்தோர்.


எல்லாவற்றையும் கடவுள் கடந்தவரே யாயினும் அவர் இல்லாத இடம் இல்லை. அவரன்றி ஓர் அணுவம் அசையாது என்பது இந்நாட்டார் கொள்கை. இவ்வுண்மையை அறியாது செருக்குற்றுச் சீரழிந்தவர் பலர் ஆவர். அவர்களில் ஒருவன் இரணியன். அவன் மகனாகிய பிரகலாதன் கடவுளே கதியென்று நம்பியிருந்தான். ஒருநாள் இரணியன் தன் மகனைப் பார்த்து, 'உன் கடவுள் எங்கிருக்கிறான்? இந்த தூணில் இருக்கின்றானா? என்று எதிரே நின்ற தூணைக்கட்டிக் கடுகடுத்து வினாவினான்; அற்கு மறுமொழி கூறலுற்றான் பிரகலாதன்:

சாணினும் உளன், ஓர் தன்மை அணுவினைச் சதகூ றிட்ட

காணினும் உளம்மா மேருக் கன்றினும்உளன், இந் நின்ற

தூணினும் உளன், முன் சொன்ன சொல்லினம் உளன்"


என்று கூறினான். அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நிறைந்த கடவுள், நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணத்தினும் உள்ளான், சொல்லும் ஒவ்வொரு சொல்லினும் உள்ளான், செய்யும் ஒவ்வொரு செயலினும் உள்ளான் என்று அறிந்து நடப்வரே சிறந்தோராவர். பஞ்ச பூதங்களாகிய மண்ணிலும், விண்ணிலும், நீரிலும் , நெருப்பிலும், காற்றிலும் கலந்து நிற்பவர் கடவுள். இத் தகைய கடவுளை,

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி"


என்று திருவாசகம் போற்றுகின்றது.


இங்ஙனம் காணுமிடமெல்லாம், கருதுமிட மெல்லாம் நீக்கமற நிறைந்தருக்கின்ற கடவுளுக்கு ஒரு நாமம் இல்லை; ஓர் உருவம் இல்லை, எல்லாம் அவர் திருநாமமே; எல்லாம் அவர் திரு உருவமே.


" ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில் லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ"


என்றார் மாணிக்க வாசகர், ஆகையால், நாமபேதங்களையும் உருவ பேதங்களையும் பெரிதாகக் கொண்டு ஒரு மத்தார் மற்றொரு மதத்தாரைப் பகைக்க வேண்டுவதில்லை; பழிக்க வேண்டுவனதில்லை என்பது மெய்யறிவுடையோர் கருத்து. கவிஞராகிய பாரதியார், இக் கருத்தைத் தெளிவாகப் பாடிப்போந்தார்:


“தெய்வம் பலபலச் சொல்லிப்-பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்

உய்வ னைத்திலும் ஒன்றாய்--ஓங்கும்

ஓர்பொருளானது தெய்வம்


தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்

கேயிற் சிலுவையின் முன்னே--நின்ற

கும்பிடும் ஏசு மதத்தார்

யாரும் பணிந்திடும் தெய்வம்--பொருள்

யாவினும் நின்றிடும் தெய்வம்

பாருக்குள் ளேதெய்வம் ஒன்று -- இதில்

பற்பல சண்டைகள் வேண்டாம்


என்பது பாரதியாரின் அறிவுரை


அன்பே கடவுளின் வடிவம் என்று எல்லாச் சமயங்களும் இசைந்து கூறுகின்றன. எனவே, அன்பு வடிவாகிய கடவுளை அறிவதறக்கும், அவர் அருளைப் பெருவதற்கும் அன்பையே சாதனமாகக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். 'எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு' என்று இவ்வுண்மையைச் சுருங்கச் செல்லி விளங்கவைத்தார் ஒரு பெரியார். அன்பு, தெய்வத்தன்மையுடையதாதலால் அதற்கு எல்லையில்லை; சாதி குலம் முதலிய பேதங்கள் இல்லை. எல்லாரும் ஓர் குலம்; எல்லோரும் ஓரினம் என்பதே அன்புடையார் கொள்கை. கடவுளிடத்து நாம் செலுத்தும் அன்பு, பக்தி முதிர்ந்த நிலையில் தெய்வப் பித்து வந்து எய்தும். இவ் வுலகில் எல்லாரும் பித்தரே என்றார் ஒரு பெரியார். சிலர் பெண்ணாசை பிடித்த பெரும் பித்தர் , பொருளாசை பிடித்த பணப்பித்தர். சிலர் புகழாசை பிடித்த புகழ்ப் பித்தர். ஒரு சிலர் கடவுள் வெறி பிடித்த தெய்வப் பித்தர். தெய்வப் பித்தராகவே வாழ விரும்புவர் பக்தர். கடவுளைப் பெரும் பித்தன் என்று பாடினார்


“தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்

பெண்பால் உகந்தான் பெரும் பித்தன் காணேடி”

என்பது திருவாசம். சிவனடியார்களுள் ஒரு வராகிய சுந்தரமூர்த்தி தம்மை ஆட்கொண்டருளிய பெருமானே,


“பித்தா பிறைசூடி, பெருமானே அருளாளா”


என்றெடுத்து

“அத்தா உனக்காளாய் இனியல்லேன்'

என்று திருப்பாசுரம்பாடினார்


கடவுளை வணங்குவதற்கு ஏற்ற இடங்கள் கோவில் என்று பெயரால் குறிக்கப்படும். தமிழ் நாட்டில் அழகிய சோலைகளே ஆதியில் கோவில் களாக அமைந்தன. கண்ணுக்கினிய பசுமைநிறமும், செவிக்கினிய இயற்கையொலியும், நாச்கினிய நறுமணமும், நாவிற்கினிய நற்கனியும், உடம்பிற்கினிய குளிர் நிழலும் பொருந்திய சோலைகளில் நம் முன்னோர் கடவுளை வணங்கினார்கள்; பூஞ் சோலையிலுள்ள அழகிய மலர்களைக் கடவுளுக்கு அணிந்தார்கள்; கொம்பிலே பழுத்த பழங்களைக்கையுறையாக அளித்தார்கள்; இளந்தளிழர்களையும் தழைகளையும் கொண்டு அருச்சனை செய்தார்கள். இத் தகைய சோலைகள் பிறகாலத்தழில் கற்கோயில்கள் ஆயின. ஆயினும், பழைய சோலையின் அடைளாம் பலவிடங்களில் உண்டு. திருச்சிராப்பள்ளியில் திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு ஆதியில் ஒரு செலுமையான நாவல் மரத்தில் மக்கள் கடவுளை வணங்கினார்கள். அதனால் ஐம்புகேஸ்வரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது. ஐம்பு என்பது வடமொழியில் நாவல் மரத்தின் பெயர், (அப்படித்தான் நினைக்கிறேன்) தென்னாட்டிலுள்ள திருக்குற்றாலத்தில் ஒரு குறும்பலா மரத்தில் ஈசன் கோவில் கொண்டார். அப்பலா மரத்தைத் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிப் போற்றினார். மதுரைக்கு அருகேயுள்ள அழகர் மலையின் பழம் பெயர் திருமால் இருஞ்சோலை என்பது. இப்போது கற்கோவில்களாக விளங்கும் ஆலயங்களிற் காணப்படுகின்ற ஸ்தல விருக்ஷமே முற்காலத்திலிருந்த சோலையைக் காட்டும் அடையாளம் என்பர்.

இது மட்டுமில்லாது கீழ் கண்ட படியும் கிராமத்தில் இறைவனை அழைப்பர்

மரம் பெயர்

பனை பனையடியன்

வேம்பு வேம்படியான்

ஆலமரம் ஆலடியான்

வன்னிமரம் வன்னியடியான்

மலை மலையடியான் (கருப்பு)

இவ்வாறும் அழைப்பதுண்டு

குருந்த மரம்

கொன்றைமரம் (மழபாடியில்)

இப்படி எத்தனையோ

ஆண்டவன் என்பது கடவுளைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. தமிழ் நாட்டு மகமதியரும் ஆண்டவன் என்ற பெயரைப் பெரிதும் வாழங்குகின்றார்கள். நாகூர் ஆண்டவர். பழனியிலுள்ள முருகனைச் சைவர்கள் பழனி யாண்டவன் என்பர். ஆண்டவன் என்னும் சொல் தலைவன் என்ற பொருளைத் தரும். ஆண்டவன் கடமை அடியார்களைத் தாங்குதல். அடியவர் கடமை ஆண்டவனுக்குத் தொண்டு செய்தல். ஒளயார் கூடச் சொல்லூவார்,' பெரியது கேட்கின்.....தொண்டரின் தொண்டும் பெரிதே ' என்பார். இக் கருத்து தேவாரம் திருவாய்மொழி முதலிய தெய்வப் பாடல்களில் தெளிவாக விளங்குகின்றது. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.

"நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்கடன் அடியேனையும் தாங்குதல்

என்கடன் பணிசெய்து கிடப்பதே"


என்று அருளிப் போந்தார். ஆண்டவன் திருவடியே கதியென்று அடைக்கலம் புகுந்தோரை அவர்அருள் கைக்கொண்டு காக்கும். சரணாகதி என்பது இதுவே; மனக்கவலையை மாற்றுவதற்கு இதுவே சிறந்த வழியெனக் காட்டினார் திருவள்ளுவர்.


"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்ற லரிது"

என்பது அவர் அருளிய திருக்குறள். தனக்குவமை இல்லாத தலைவனே ஆண்டவன். அவன் திருவடியைச் சரணடைந்தாலன்றிப் பிறப்பால் வரும் துன்பத்தைப் போக்க இயலாது என்பது திருவள்ளுவர் கருத்து. சரணாகதியின் பெருமையைத் தமிழ் இலக்கியங்களிற் பரக்கக் காணலாம்.


குலசேகர ஆழ்வார் என்னும் பெரியார் திருமால் திருவடியே சரணம் என்று திருத்தமாகப் படியுள்ளார்.


"தருதுயரம் தடடியேல்உன் சரணல்லால் சரண்இல்லை

விரைகுழுவும் மலர்பொழில்சூழ் வித்துவக்கோட் டம்மானே

அரிசினத்தால் ஈன்றதாய் அகறடறிடினும் மற்றவள்தன்

அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றிருந்தேனே"


என்பது அவர் திருப்பாசுரம். உடல் பொருள் ஆவியேன்னும் மூன்றையும் கடவுளிடம் ஒப்புவித்த பொரியாருள் ஒருவர் மாணிக்கவாசகர். அவர் சரணாகதியின் தன்மையைத் திருவாசகத்தில் உணர்த்துகின்றார்.


"அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ

இன்னோர் இடையூற என்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே

நன்றே செவ்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயமே"

என்று பாடினார்.

கடவுளிடம் அடைக்கலம் புகும் சரணாகதி முறை கிறஸ்தவ சமயத்திலும் உண்டு. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே ஏசுநாதர் சேவையில் ஈடுபட்ட பெஸ்கி என்னும் வீரமா முனிவர் கொள்ளிட நதியின் வட கரையில் ஒரு கோயில் கட்டினார். தேவமாதாவாகிய மேரியம்மையின் திருவுருவத்தை அங்கு நிறுவினார்; அம் மாதாவை அடைக்கல மாதா என்று அழைத்தார்; அவர் காவலில் அமைந்த ஊருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; திருக்காவலூரில் வாழ்ந்த கிறிஸ்தவருக்கு அடைக்கலம் அளித்த மாதாவின் மீதுஒரு கலம்பகம் பாடினார். அப் பாமாலை 'திருக்காவலூர்க் கலம்பகம்' என்று வழங்கப்படுகிறது.


இன்னும் தமிழ்க் காவியங்களில் சிறப்புற்று விளங்கம் கம்பராமாயணம் சரணாகதியின் செம்மையை விரித்துரைப்பாதாகும். இராமன் கானகம் புகுந்த பொழுது அரக்கரது கொடுமையால் வருந்திய முனிவர்கள் வந்து சரணம் அடைந்தார்கள். அப்பால் தமது தமையனாகிய வாலியின் கொடுமையால் வாடி வருந்திய சுக்ரீவன் என்ற வானரத் தலைவன் வந்து சரணம் புகுந்தான். பின்னர் .இராவணன் தம்பியாகிய விவீஷணன் வந்து சரணாகதியடைந்தான். இங்ஙனம் அடைக்கலமாக வந்தடைந்தோரையெல்லாம் இராமன் ஆதரித்து ஏற்றுக்கொண்டான்; அவர் மனக்கவலையை மாற்றியருளினான். ஆகவே, அடைக்கலத்தின் பெருமையை விளக்கும் காவியம் இராமாயணம் என்பது மிகையாகாது. அக் காவியததின் உட்கருத்தைக் கம்பர் முதற் கவியிலேயே குறிப்பாகக் கூறியுள்ளார்.


'உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்

தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே"


என்பது கம்பர்அருளிய கடவுள் வாழ்த்து. 'உலகங்களை யெல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும் விளையாடும் பெருமானே ஆண்டவன். அவனே எல்லார்க்கும் அடைக்கலம் அளிப்பவன்' என்று இராமாவதாரத்தின் உட்பொருளை உணர்த்தினார் கம்பர்.

ஆண்டவனாகிய கடவுளின் திருவருளைப் பெறுவதற்குப் பல வழகளைப் பெரியோர் வகுத்துள்ளார்கள். அவ்வழிகளை மார்க்கம் என்றும் சொல்வதுண்டு. இம் மார்ககங்களே மதங்கள் என்றும், சமயங்கள் என்றும் போற்றப்படுகின்றன. தமிழ் நாட்டில் ஆறு வகைப்ட்ட சமயங்கள் உண்டு என்று அறிந்தோர் கூறுவர். அவற்றுள் சைவமும் வைணவமும் சாலப் பழமை வாங்ந்த சமயங்கள், சமணமும் சாக்கியமும் சில காலம் சிறந்திருந்து நிலை குலைந்தன. தற்காலத்தில் இஸ்லமும் கிறிஸ்தவமும் வளர்ந்தோங்கி வருகின்றன. இங்ஙனம் சமயங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஆண்டவன் காரணமாகச் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளலாகாது என்பதே சான்றோர்கள் கொள்கை.


பண்டைத் தமிழ் நாட்டில் சமயப் பொறுமை தலை சிறந்து விளங்கிற்று. ஒரு குடும்பத்தில் தமையன் சைவனாகவும், தம்பிசமணனாகவும் இசைந்து வாழக் கண்ட நாடு தமிழ் நாடு. சேர நாட்டையாண்ட செங்குட்டுவன் என்பவன் சிறந்த சைவன். அவன் தம்பியாகிய இளங்கோவடிகள் சிறந்த சமண முனிவர். அம் முனிவரே சிலப்பதிகார ஆசிரியர். அவர்கள் இருவரும் ஒற்றுமையுன் வாழந்து வந்தார்கள். இத் தகைய நல்லோர் வாழ்ந்த காலம் சங்க காலம் என்று சொல்லப் படுகின்றது. சமயச் சண்டையும் சச்சரவும் இல்லாயினும் ஏற்றமுற்றிருந்த காலம். இக்காலத்திற்குப் பின் சமயச் சண்டைகள் மூண்டன. ஆண்டவன் பெயரால் சண்டையிட்டு மாண்டார் பலர். சமயச் சண்டை இக் காலத்தில் அவ்வளவாக இல்லை. சமரச சன்மார்க்கமே இந்நாளில் அறிவுடையோர் போற்றும் சமயம். தர்க்கமும் சூதர்க்கமும் ஒழிந்து சமரசம் பரவும் காலத்தை ஆர்வத்தோடு எதிர் நோக்கினார் தாயுமானார்.

"தர்க்கமிட்டு பாழாம் சமயக் குதர்க்கம்விட்டு

நிற்கும்அவர்க கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ?


என்று பாடினார் அப் பெரியார். அந் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாள் ஆகும்

ஏதோ எனக்குத் தெரிந்த கேட்ட படித்த செவியுற்ற செய்தியைச் சொன்னேன் அவ்வளவே.

சிவாஜி கணேசன் பகுதி 2

மீண்டும் நாடகம்
என்.எஸ்.கிருஷ்ணன்
நாடகக் கம்பெனியில் பிளவு
அண்ணாவின் நாடகம்
வாழ்க்கையில் திருப்புமுனை
பெரியார் பாராட்டு
சக்தி நாடகசபா
வேலூர் முகாம்
திருமணம்
.
மீண்டும் நாடகம்

அப்போது யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளையின் ``பாலகான சபா", ``மங்கள கான சபா" என்ற புதிய பெயரில் நாடகங்கள் நடத்தி வந்தது. அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய டி.கே.சம்பங்கி, எம்.இ.மாதவன் ஆகிய நடிகர்கள் இந்த நாடகக் கம்பெனியை வாங்கி, கும்பகோணத்தில் முகாமிட்டு நாடகம் நடத்திக்கொண்டு இருந்தனர்.சிவாஜியின் பழைய நண்பர் ஒருவர், அந்த நாடகக் குழுவில் இருந்தார். திருச்சிக்கு வந்த அவர் சிவாஜியை சந்தித்தார். ``நீ மெக்கானிக் வேலையா பார்க்கிறாய்? நாடக நடிகனான நீ, இப்படி இரும்பைத் தூக்கிக்கொண்டு அலைகிறாயே. என்னுடன் வந்து விடு. மீண்டும் நாடகத்தில் நடிக்கலாம். நல்ல நடிகர்கள் இருந்தால் அழைத்து வருமாறு, கம்பெனி முதலாளி என்னிடம் சொன்னார்" என்றார். இதுபற்றி தாயாரிடம் சிவாஜி ஆலோசித்தார். மகனை மீண்டும் நாடகத்துக்கு அனுப்ப ராஜாமணி அம்மாளுக்கு விருப்பம் இல்லை. ``இப்போது பார்க்கும் மெக்கானிக் வேலையிலேயே தொடர்ந்து இரு. எதிர்காலத்தில் பெரிய மெக்கானிக் ஆகலாம்.
நாடகக் கம்பெனி வேண்டாம்" என்று கூறினார்.சிவாஜி யோசித்தார். நடிப்பு என்பது அவருடைய ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று. மீண்டும் நாடகக் கம்பெனிக்கு போகக் தீர்மானித்தார். ``அம்மா! நாடகத்தில் தொடர்ந்து நடித்தால், எதிர் காலத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கொஞ்சகாலம் பொறுத்துக்கொள்" என்று ஆறுதல் கூறிவிட்டு, நண்பனுடன் கும்பகோணம் புறப்பட்டார்.அங்கு, சிவாஜியின் பழைய நண்பர்கள்தான் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் சிவாஜியை வரவேற்றார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன்

மங்கள கான சபா, சென்னைக்கு சென்று நாடகங்கள் நடத்தி வந்தது. அப்போது, அந்த கம்பெனியை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாங்கி, ``என்.எஸ்.கே.நாடக சபா" என்ற புதிய பெயரில் நாடகங்களை நடத்தலானார்.அப்போது அந்த கம்பெனியில் கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி ஆகியோர் சேர்ந்தார்கள். கே.ஆர்.ராமசாமி நன்றாக பாடக்கூடியவர். எனவே, ``மனோகரா", ``ரத்னாவளி" போன்ற நாடகங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி மீண்டும் பெண் வேடம் போட்டார்!

இந்த சமயத்தில் (1944-ம் ஆண்டு நவம்பரில்) ``இந்துநேசன்" என்ற மஞ்சள் பத்திரிகையின்
ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு சதி செய்தாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரும் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்து, விடுதலை பெறுவதற்காக சட்டத்தின் துணையுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தாலும், தன்னுடைய நாடகக் குழுவினர் வேலை இல்லாமல் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணினார். எனவே, நாடகக் கம்பெனியைத் தொடர்ந்து நடத்தும்படி, தன்
மனைவி டி.ஏ.மதுரத்திடம் கூறினார்.

நாடகக் கம்பெனியில் பிளவு

எஸ்.கே.நாடகக் குழுவில், அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமமும், கே.ஆர்.ராமசாமியும் முக்கிய
நடிகர்கள். இவர்களில் யாரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைப்பது என்று மதுரம் யோசித்தார். முடிவில் சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார். இதனால், கே.ஆர்.ராமசாமி வருத்தம் அடைந்தார். என்.எஸ்.கே.நாடக சபாவில் இருந்து விலகி, புது
நாடகக் கம்பெனி தொடங்க தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, நாடகக் குழு இரண்டாக
பிளவுபட்டது. சிலர் சகஸ்ர நாமம் அணியிலும், சிலர் கே.ஆர்.ராமசாமி அணியிலும் சேர்ந்தனர். கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்தவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை
சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும் அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது ``திராவிட நாடு" என்ற
பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும், மற்றவர்களும்
தங்கினார்கள். சிவாஜிகணேசன் வாழ்க்கையில் திருப்புமுனை திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு
இருந்தனர்.

அண்ணாவின் நாடகம்

மாநாட்டில் நடிப்பதற்காக ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:
சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன்.மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி!
இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன்பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள். இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக
எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது. இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார்.என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில்
நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

வாழ்க்கையில் திருப்புமுனை

``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜி கணேசன், இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.எனவே, சிவாஜியை அழைத்து, ``கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன்
காதுகளையே நம்பமுடியவில்லை. ``என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?" என்றார். ``நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்" என்றார், அண்ணா.மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, ``நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்" என்று
கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். ``கணேசா! வசனத்தைப் படித்தாயா?" என்று கேட்டார்.சிவாஜி அவரிடம், ``அண்ணா! நீங்கள் இப்படி
உட்காருங்கள்!" என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார். அண்ணா சிவாஜியை கட்டித்தழுவி ``கணேசா! நீ
இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை" என்றார்.
அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

திராவிட கழக மாநாட்டில், ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர்.

பெரியார் பாராட்டு

3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார். ``நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா" என்று பாராட்டினார்.அத்துடன், ``யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக
நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர். ``சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.

``என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்!
ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப்பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜிகணேசன் ஆனேன். `சிவாஜி' என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்டபிச்சை" என்று சிவாஜிகணேசன் தன்
வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

``பராசக்தி" வருவதற்கு முன்பே சிவாஜி கணேசன்
திருமணம் சீர்திருத்த முறையில் நடந்தது
(1-5-1952)

நடிகர் சிவாஜி கணேசன் திருமணம், ``பராசக்தி" படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சுவாமி மலையில் நடந்தது. கே.ஆர்.ராமசாமி குழுவில் சிவாஜி நடிகர் கே.ஆர்.ராமசாமி தன் நாடகக் குழுவை தஞ்சாவூரில் தொடங்கினார். இந்த நாடக்குழுவில்,
சிவாஜி கணேசனும் இடம் பெற்றார். ``மனோகரா" நாடகத்தில் கே.ஆர்.ராமசாமி மனோகரனாக நடித்தார். சிவாஜிகணேசன், மனோகரனின் தாயார் பத்மாவதியாக
நடித்தார். இந்த சமயத்தில்தான் கே.ஆர்.ராமசாமிக்காக ``ஓர் இரவு" என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டு,
கதையை புதுமையாக எழுதியிருந்தார். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசனும் நடிப்பதாக
இருந்தது. ஆனால், நாடகக் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், அவர் நாடகத்தில் நடிக்கவில்லை காஞ்சீபுரத்துக்கு சென்று, ``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கிக் கொண்டு, அண்ணாவுக்கு உதவியாக இருந்தார். அண்ணா பொதுக்கூட்டங்களுக்குச் செல்லும்போது, சிவாஜியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். மேடையில் பேசுவதற்கு பயிற்சி அளிப்பார்.

சக்தி நாடகசபா

இந்தக்காலக் கட்டத்தில், ``சக்தி நாடக சபா" என்ற நாடகக் குழுவினர் நாடகங்களை நடத்தி வந்தனர். தங்கவேலுபிள்ளை என்பவர் இந்த நாடகக் கம்பெனியின் உரிமையாளர். எனினும், ``சக்தி" கிருஷ்ணசாமியின் முழுப்பொறுப்பில் நாடக கம்பெனி நடந்து வந்தது.
இந்த கம்பெனியில் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.என். நம்பியார், எஸ்.வி.சுப்பையா ஆகியோர் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த சினிமா படங்களில் நடிப்பதற்காக கோவை சென்று விட்டனர். எனவே, சக்தி நாடக சபைக்கு அனுபவம் மிக்க நடிகர்கள் தேவைப்பட்டனர்.
சிவாஜியின் பால்ய நண்பரான கரந்தை சண்முக வடிவேலு சக்தி நாடகசபை சார்பில் காஞ்சீபுரம் வந்து, அண்ணாவை சந்தித்தார். ``சக்தி நாடக சபாவுக்கு நல்ல நடிகர்கள் தேவைப் படுகிறார்கள். நீங்கள் சிவாஜிகணேசனை அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்" என்று கூறினார்.

அண்ணா சிறிது யோசித்தார். பிறகு சிவாஜி கணேசனை அழைத்து, ``கணேசா!நீ சக்தி நாடக சபாவுக்குப் போ. உன்னை எப்போது திரும்பக் கூப்பிட வேண்டுமோ அப்போது அழைத்துக் கொள்கிறேன்" என்றார். இதனால், அண்ணாவிடம் பிரியா விடை பெற்று சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி சென்றார். சக்தி நாடக சபை அப்போது திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அந்தக் குழுவினர் சிவாஜிக்கு நல்ல மரியாதை கொடுத்தனர். முக்கிய வேடங்கள் அவருக்குக் கிடைத்தன.

வேலூர் முகாம்

திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது.
அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார். அந்த நாடகத்தில் சிவாஜிக்கு வேஷப்பொருத்தம் பிரமாதமாக இருக்கும். அசல் நூர்ஜஹான் போலவே இருப்பார்; அழகாக நடனம் ஆடுவார்.

``நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. ``எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார்.

பராசக்தி

இந்த சமயத்தில், தேவி நாடக சபையினர் ``பராசக்தி" என்ற நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகத்தை பெருமாள் முதலியார் பார்த்தார். அந்த நாடகத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.``பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று தீர்மானித்தார்.நினைத்ததை செயலில் காட்டினார். ``ஏவி.எம்." கூட்டுறவுடன் ``பராசக்தி"யை எடுத்து, தமிழ்ப்பட உலகுக்கு நடிப்பின் இமயத்தை அறிமுகம் செய்து வைத்தார். தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியாரை, கடைசி மூச்சு உள்ள வரை தெய்வமாகவே கருதினார், சிவாஜிகணேசன்.

திருமணம்

``பராசக்தி"யில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம்நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார்.பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது.
சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன்-
பஞ்சு ஆகியோர் வந்திருந்தனர்.

திருச்சியில் தமிழாசிரியராக இருந்த ரத்தினம் பிள்ளை, திருக்குறளைப்படித்து திருமணத்தை நடத்தி வைத்தார். கண்ணதாசன் மாலையை எடுத்துக் கொடுக்க அதை மணமகளுக்கு அணிவித்தார், சிவாஜி. பின்னர் தாலி கட்டினார். மணமக்களை கண்ணதாசன் வாழ்த்தி
பேசினார். ஓட்டலில் இருந்து எடுத்து வந்த சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
``என்னுடைய கல்யாணச் செலவு 500 ரூபாய்தான்" என்று சிவாஜி கூறியுள்ளார்.
(இப்படி தான் திருமணம் செய்து கொண்டதால் வருத்தப்பட்ட சிவாஜி தனது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு 100 புரோகிதர்களை வைத்து ஆச்சாரப்படி நடத்தினார்)
கோடம்பாக்கத்தில்

திருமணத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் வீடு பார்த்து, மனைவியுடன் குடியேறினார், சிவாஜிகணேசன். சில நாட்கள் கழித்து ராயப்பேட்டை பெசன்ட்
ரோட்டுக்கு குடிபோனார். அங்குதான் இப்போது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கிறது.
சிவாஜி- பத்மினி ஜோடியாக நடித்த முதல் படம் ``பணம்" ``பராசக்தி"யை அடுத்து சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த படம் ``பணம்". இதில் சிவாஜி கணேசனும், பத்மினியும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். ``பராசக்தி"யில் சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த போதே வேறு சில படவாய்ப்புகள் வந்தன.
நனறி மாலை மலர்

சிவாஜி கணேசன்

பிறப்பு

அண்ணன்கள்

பால்கார அம்மா

நடிக்க ஆர்வம்

யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை

காக்கா ராதாகிருஷ்ணன்

அண்ணன்கள் மரணம்

பெற்றோருடன் சந்திப்பு

ராதா வருகை

பெரியாருடன் அறிமுகம்

காட்டுப்பாதை

மெக்கானிக்


பிறந்த ஊர்


சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். இது மிகவும் செழிப்பானது. அவருடைய தந்தை சின்னையா மன்றாயரின் குடும்பம் அங்குதான் வசித்தது. தாயார் பெயர் ராஜாமணி அம்மாள். அவருடைய தகப்பனார் பெயர் சின்னச்சாமி காளிங்கராயர், அவர் ரெயில்வேயில் அதிகாரியாக பதவி வகித்தவர். திருச்சி, மதுரை பகுதியில் ரெயில்பாதை போடப்பட்டபோது, அதற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.

சின்னச்சாமி காளிங்கராயருக்கு 11-வதாக பிறந்த குழந்தை ராஜாமணி அம்மாள்! மகள் மீது காளிங்கராயருக்கு மிகுந்த பாசம். எனவே ``ராஜாமணி எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து கொடுத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்" என்று எண்ணினார்.

சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் அதிகம் படிக்காதவர். ஆயினும் ஒரு மிராசுதார். எனவே, அவருக்கு ராஜாமணியை திருமணம் செய்து கொடுத்து, வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொண்டார். எனினும் சில காலத்துக்குப்பின் சின்னையா மன்றாயர் ரெயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். நாகப்பட்டினத்தில் இருந்த ரெயில்வே ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்தார். மனைவியுடன் அங்கு குடியேறினார்.


சிவாஜி பிறந்தார்


சின்னச்சாமி காளிங்கராயர் வீடு விழுப்புரத்தில் இருந்தது. பிரசவத்துக்காக அங்கு ராஜாமணி அம்மாள் சென்றார். அங்குதான் 1928 அக்டோபர் 1-ந் தேதி சிவாஜிகணேசன் பிறந்தார்.

சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், தீவரவாத எண்ணம் கொண்டவர்கள். ``அகிம்சை மூலம் வெள்ளையர்களைப் பணிய வைக்க முடியாது.

துப்பாக்கி ஏந்தினால்தான், நாட்டைவிட்டு ஓடுவான்" என்ற நேதாஜியின் கொள்கையை கடைபிடிப்பவர்கள்.அப்போதெல்லாம், ஒரு காரியத்தை நடத்துவது யார் என்று திருவுளச்சீட்டு போட்டுப்பார்ப்பார்கள். ``ஆஷ் துரையை சுட்டுக்கொல்வது யார்?" என்று தீவிரவாத இளைஞர்கள் சீட்டு போட்டு பார்த்தபோது, வாஞ்சிநாதன் பெயர் வந்தது. அதனால், அவர், மணியாச்சி ஜங்ஷனில் ஆஷ்துரையை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் ரெயிலுக்கு யார் வெடி வைப்பது என்று, சின்னையா

மன்றாயரும் அவர் நண்பர்களும் திருவுளச் சீட்டு போட்டுப்பார்த்தார்கள். அதில் சின்னையாவின் பெயர் வந்தது. அதனால் ரெயிலுக்கு அவர் வெடி வைத்தார். போலீசார் இதைப்பார்த்துவிட்டார்கள். அவரை துரத்திச் சென்றார்கள். சின்னையா தப்பி ஓடும்போது, அவரை நோக்கி போலீசார் சுட்டனர். சின்னையா கீழே விழுந்தார். போலீசார் அவரை சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். சின்னையா தலையில் பலத்த காயம் அடைந்தார்.

அவரை கைது செய்து, வேலூருக்கு கொண்டுபோய், ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்றார். அவர் குணம் அடைந்த போதிலும், காது சரியாகக் கேட்கமுடியாமல் போய்விட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்!


7 ஆண்டு ஜெயில் ரெயிலுக்கு வெடி வைத்ததாக சின்னையா மன்றாயர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

``மருமகன் ஜெயிலுக்கு போய்விட்டாரே" என்று சிவாஜியின் தாத்தா மனம் நொந்தார். நாளுக்கு நாள், உடல் நலிந்தது. சிலகாலத்துக்குப்பின் அவர் மரணம் அடைந்தார்.


அண்ணன்கள்


சிவாஜிக்கு திருஞான சம்பந்த மூர்த்தி, கனக சபாநாதன், தங்கவேலன் என்று மூன்று அண்ணன்கள். சிவாஜிக்கு சூட்டப்பட்ட பெயர் கணேசமூர்த்தி .தம்பி சண்முகம், தங்கை பத்மாவதி.சிவாஜியின் தாத்தா இறந்துபோன பிறகு, ராஜாமணியம்மாள் குடும்பத்துடன் திருச்சியில் குடியேறினார். திருச்சி அருகே, பொன்மலைக்குப் பக்கத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் ராஜாமணி அம்மாள் குடும்பத்துக்கு ஒரு வீடு இருந்தது. அங்கு வசிக்கலானார். சிவாஜிகணேசன் வளர்ந்தது, நாடக நடிகரானது, சினிமா உலகில் புகுந்தது எல்லாமே இந்த வீட்டில் வசித்த போதுதான்.


``பால்காரம்மா"


எஸ்.எஸ்.வாசனின் தாயாரும், எம்.ஜி.ஆரின் தாயாரும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற எப்படி கஷ்டப்பட்டார்களோ, அதுபோல் ராஜாமணி அம்மாளும் மிகவும் கஷ்டப்பட்டார். `தந்தையோ இறந்து போய்விட்டார். கணவர் சிறை சென்று விட்டார். பிழைக்க என்ன செய்வது? குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது' என்று யோசித்த ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். கறவை மாடு வாங்கி, பால் விற்கத் தொடங்கினார். நாளடைவில், ராஜாமணி அம்மாள் என்ற பெயர் மறைந்துபோய், ``பால்காரம்மா" என்ற பெயர் நிலைத்து விட்டது!


வீட்டுக்கு அருகே கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அங்கு சிவாஜியை சேர்த்துவிட்டார், ராஜாமணி அம்மாள். அப்போது சிவாஜிக்கு 4 வயது.தந்தை விடுதலை. சிறையில் இருந்த சின்னையா மன்றாயர், நல்ல மெக்கானிக் என்பதால் சிறையில் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வது, தண்ணீர் டாங்க்கை பழுது பார்ப்பது போன்றவற்றை செய்து, சிறை அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கினார்.எனவே நன்னடத்தைக்காக, 7 வருட தண்டனை 4 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையாகி வீடு திரும்பினார், சின்னையா மன்றாயர். அப்போது சிவாஜிக்கு 4 வயது. ``இவர்தான் உன் அப்பா" என்று, தன் கணவரைக் காண்பித்தார், ராஜாமணி அம்மாள். கண்களில் கண்ணீர் வழிய, தந்தையைக் கட்டித் தழுவிக் கொண்டார், சிவாஜி. சுதந்திரப் போராட்டத்தில் சிவாஜியின் தந்தைக்கு 7 ஆண்டு ஜெயிலில்!- தந்தை கைதான நாளில் சிவாஜி பிறந்தார்பராசக்தி வெளிவந்த பின், ``யார் இந்த சிவாஜி கணேசன்?" என்ற கேள்வி நான்கு திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள, ரசிகர்கள் ஆவல் கொண்டனர்.இதனால், அவர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டன. பத்திரிகைகள் அவரை பேட்டி கண்டு, படங்களுடன் பக்கம் பக்கமாக வெளியிட்டன.

7 வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார், சிவாஜி சிவாஜி கணேசன், 7-வது வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார்.பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே, சிவாஜிக்கு

நடிப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் இருந்தது.


நடிப்புக்கு வித்திட்ட நிகழ்வு


ஒருமுறை, ``வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றார்.

அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றி விடுவார்கள்.``கட்டபொம்மன்" நாடகத்தில், வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடந்து வந்தார்.

நாடகம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும், சிவாஜிக்கு அவர் அப்பாவிடம் உதை கிடைத்தது! ஏனென்றால் தேசியவாதியான சின்னையா மன்றாயருக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி, வெள்ளைக்கார சிப்பாய் வேடம் போட்டதால், அவருக்கு அளவு கடந்த கோபம்! ``டேய், கூத்தாடிப் பயலே! உனக்கு என்ன தைரியம் இருந்தால், என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்!" என்று கூறியபடி அடித்தார்.இதனால் சிவாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படுக்கையில் போய் விழுந்தார். ``நாமும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்" என்ற எண்ணம், மனதில் ஆழமாகப் பதிந்தது.


யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை


இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் ``மதுரை ஸ்ரீபாலகான

சபா" என்ற நாடகக்கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது.

(யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான

படங்களில் அவருடன் நடித்தவர். பிற்காலத்தில் சிவாஜி நடித்த ``தூக்கு தூக்கி"யில், வாத்தியாராக நடித்தவர்.) இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விடவேண்டும் என்று சிவாஜி விரும்பினார். நாடகக் குழுவினர், திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.நாடகக் கம்பெனிக்கு சிவாஜி சென்றார். ``எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா- அம்மா இல்லாத அனாதை. நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.அப்போது சிவாஜி நன்றாகப் பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருந்தார். அவரை ஒரு பாட்டு பாடச்

சொன்னார்கள். ``பழனிவேல் இது தஞ்சம்" என்ற பாடலை சிவாஜி பாடினார். நாடகக்

கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள்.


காக்கா ராதாகிருஷ்ணன்


அப்போது, அந்தக் கம்பெனியில் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர்,

சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர். சிவாஜியைப் பார்த்த அவருக்கு ஒரே ஆச்சரியம்.

``இங்கே எப்படியடா வந்தாய், கணேசா!" என்று கேட்டார். ``நான் வீட்டுக்கு தெரியாமல் இந்த கம்பெனியில் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார். நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக் கல்லுக்கு சென்று முகாமிட்டது. அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி

அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான், சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.``சின்ன பொன்னுசாமிதான் என் நாடக குரு" என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார்.


சிவாஜி நடித்த முதல் நாடகம் ``ராமாயணம்" அதில் அவர் போட்ட வேடம் சீதை. ``யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்" என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார். முதல் நாளே சிறப்பாக நடித்தார், சிவாஜி. வேஷத்தை கலைத்து உள்ளே சென்றபோது, வாத்தியார் பொன்னுசாமி அவர் முதுகில் தட்டிக்கொடுத்து, ``மிகவும் நன்றாக நடித்தாய்" என்று பாராட்டினார். நாட்கள் ஆக ஆக, புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார், சிவாஜி. சீதை வேஷம் போட்ட அவர், பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில், அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார்.

ராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்கு கிடைத்தது. இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்தபோதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார்.

பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், அவர் ஏற்று நடித்தார்.அந்தக் காலத்தில், நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். ``சிறை" வைக்கப்பட்டது மாதிரிதான். ``ஊருக்கு வா" என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப்பிரித்து படித்துப்பார்த்துவிட்டு, கொடுக்கக்கூடியதாக இருந்தால் மட்டும்

கொடுப்பார்கள்.


அண்ணன்கள் மரணம்


ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி விசாரித்தார். ``எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா!" என்று கூறினார்,

ராதாகிருஷ்ணன். ``என்ன?" என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, ``உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்" என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.

சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை. சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

5 ஆண்டுகளுக்குப்பின் பெற்றோரை சந்தித்தார், சிவாஜி- எம்.ஆர். ராதா நாடகக்குழுவில் சேர்ந்தார் பொதுவாக, நாடகங்களில் தொடர்ந்து பெண் வேடம் போடும் சிறுவர்கள் நடப்பது, பேசுவது எல்லாம் பெண்கள் போலவே மாறிவிடுவது உண்டு.ஆனால், சிவாஜிகணேசன் பெண் வேடம் மட்டும் அல்லாமல் ஆண் வேடங்களும், மாறுபட்ட வேடங்களும் ஏற்று நடித்தார். அதனால் எதிர்காலத்தில் எந்த வேடம் கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.எம்.ஆர்.ராதா சிவாஜி நடித்து வந்த நாடகக் கம்பெனியில், எம்.ஆர்.ராதாவும் நடிகராக சேர்ந்தார். ``பதிபக்தி" நாடகத்தில் சிவாஜி, சரஸ்வதி என்ற பெண் வேடத்தில் நடிப்பார். எம்.ஆர்.ராதா வில்லனாக நடிப்பார்.


``நாடகத்துறையில் ராதா அண்ணனுக்கு எல்லா வேலைகளும் தெரியும். அவர் ஒரு ஜீனியஸ்.

எலெக்ட்ரிக் வேலைகளும் செய்வார். காமெடி தெரியும். ஹீரோவாக நடிப்பார். வில்லனாக நடிப்பார். எல்லாவிதமான ரோல்களிலும் நடிப்பார்" என்று சிவாஜி கூறியுள்ளார்.

சிவாஜிகணேசன் நாடகக் குழுவினர் கோவைக்கு சென்ற போது, அங்கே உள்ள ஸ்டூடியோவில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ``சந்திரஹரி" என்ற நகைச்சுவை திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் என்.எஸ்.கே.யின் மகனாக காமெடி வேடத்தில் நடிப்பதற்கு ஒரு பையன் தேவைப்பட்டான். படக்கம்பெனியைப் சேர்ந்தவர்கள், சிவாஜியையும், காக்கா ராதாகிருஷ்ணனையும் அழைத்துச் சென்றனர். இந்த இருவரில் அவர்கள் தேர்வு செய்தது, காக்கா ராதாகிருஷ்ணனைத்தான். ``காக்கா ராதாகிருஷ்ணனுக்குத்தான், இயற்கையாகவே காமெடியான முகம் இருக்கிறது" என்று அவர்கள் கூறினார்கள். சிவாஜி கணேசனை, நாடகக்கம்பெனியில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.


பெற்றோருடன் சந்திப்பு


சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்டனர். சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. ``தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கம்பெனி நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை அனுப்பி வைத்தனர். வீட்டுக்குப்போனதும், சிவாஜி முதலில் பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான். சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து

போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும் அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். பாசத்தோடு தழுவிக்கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பின் சிவாஜியைப் பார்த்த தாயார் ராஜாமணி அம்மாள் கண்ணீர்விட்டு அழுதார்.பிறகு தந்தையையும், அண்ணனையும் சிவாஜி சந்தித்தார். சிறிது நேரம் அவர்களால் பேசவே முடிவில்லை. அந்த தீபாவளியை பெற்றோருடனும், அண்ணன், தம்பி, தங்கையுடனும் கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.


ராதா வருகை


சில நாட்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தார், சிவாஜி. ஒரு நாள் எம்.ஆர்.ராதா ஜட்கா வண்டியில் அங்கு வந்தார். ``சில நாட்கள் உங்கள் வீட்டில் தங்கப்போகிறேன்" என்றார்.

``என்ன அண்ணே விசேஷம்?" என்று சிவாஜி விசாரித்தார். ``நான் பொன்னுசாமிபிள்ளை கம்பெனியில் இருந்து விலகி விட்டேன். சொந்தமாக நாடகக் கம்பெனி ஆரம்பிக்கப்போகிறேன். நீயும் அதில் சேரவேண்டும்" என்றார். சிவாஜிக்கு குழப்பமாகிவிட்டது. தனக்கு ஆதரவு தந்து, நடிப்பு கற்றுக்கொடுத்த கம்பெனியை விட்டு

விலகுவதா என்று யோசித்தார். அதே சமயம் ராதாவின் பேச்சை தட்டவும் முடியவில்லை. நீண்ட மனப்போராட்டத்துக்குப் பின் ராதாவுடன் செல்ல முடிவு செய்தார். இதுபற்றி தன் தாயாரிடம் கூறினார். ``ஏம்பா! பழைய கம்பெனியை விட்டு போகிறேன் என்கிறாயே. சரியாக இருக்குமா?" என்று தாயார் கேட்டார். ``நான் ராதா அண்ணனை நம்புகிறேன். அண்ணன் ஏதாவது நல்லது செய்வார்" என்றார் சிவாஜி.எம்.ஆர்.ராதாவும், ``நான் பையனை மெட்ராசுக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன். கட்டாயம் நல்ல எதிர்காலம் ஏற்படுத்திக் கொடுப்பேன்" என்று ராஜாமணி அம்மாளிடம் கூறினார்.ராதாவுடன் சென்னைக்குப் புறப்பட்டார், சிவாஜி. அவர் சென்னையைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை.


சென்னை ஜார்ஜ் டவுனில், தனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் சிவாஜியை தங்க வைத்தார், ராதா. நாடகக் கம்பெனிக்கான உடைகள், சீன்கள் போன்றவற்றை சேகரித்தார்.சிவாஜியை ஒரு நாள் ரிக்ஷாவில் ஏற்றி, ஊரைச் சுற்றிப்பார்த் துவிட்டு வருமாறு அனுப்பினார். சிவாஜி

அதிசயத்தோடு சென்னையைச் சுற்றிப்பார்த்தார்.


பெரியாருடன் அறிமுகம்


``சரஸ்வதி கான சபா" என்ற பெயரில் நாடகக் கம்பெனியைத் தொடங்க ராதா முடிவு செய்தார். நாடக சாமான்களுடன் ஈரோடு சென்றார். அங்கு ``லட்சுமி காந்தன்", ``விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய நாடகங்களை நடத்தலானார்.திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் ராதாவின் நாடகக் கம்பெனி இருந்தது. பெரியார் வீட்டுக்கு பேரறிஞர் அண்ணா, .வெ.கி.சம்பத் ஆகியோர் அடிக்கடி வருவார்கள். அவர்களுடன் சிவாஜிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.


ராதாவின் நாடகக் கம்பெனி ஈரோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றது. அப்போது, ராதாவுக்கும், அவருடைய பங்குதாரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. நாடக சாமான்களுக்கு அவர்கள்தான் முதலீடு செய்திருந்தார்கள். எனவே, நாடகக் கம்பெனியை பங்குதாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு ராதா சென்னைக்கு சென்றுவிட்டார். நாடகக் கம்பெனியில் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிவாஜி இருந்தார்.நாடகக் கம்பெனி, கேரளாவுக்குச் சென்று

பாலக்காட்டில் முகாமிட்டது. சிறு வேடங்களில் நடித்து வந்த சிவாஜி, ``மனோகரா" நாடகத்தில் கதாநாயகனாக -மனோகரனாக நடித்தார். இந்த நாடகத்தை கொல்லங்கோடு மகாராஜா ஒரு நாள் பார்த்தார். சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி, வெள்ளித்தட்டு ஒன்றை பரிசளித்தார்.

பஸ் கம்பெனியில் ``மெக்கானிக்" வேலை பார்த்தார், சிவாஜி! சிவாஜிகணேசன் சிலகாலம் பஸ் கம்பெனியில் ``மெக்கானிக்" ஆக வேலைபார்த்தார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால், அது உண்மை. மாதம் 7 ரூபாய் சம்பளத்தில், அவர் ``மெக்கானிக்" வேலை பார்த்திருக்கிறார்.


சிவாஜிகணேசன் நடித்துக்கொண்டிருந்த ``சரஸ்வதிகான சபா" கொல்லங்கோட்டில் முகாமிட்டிருந்தபோது, குறுகிய காலம் அவர் நாடக உலகைவிட்டு விலகி இருக்க நேர்ந்தது.

நாடகக் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்த தங்கவேலு என்ற நடிகர் சிவாஜியின் நெருங்கிய நண்பர். இவரும் திருச்சியை சேர்ந்தவர். அவரைப் பார்க்க அவர் தாயார் வந்திருந்தார். நாடகக் கம்பெனியில் மகன் கஷ்டப்படுவதைப் பார்க்க சகிக்காத அந்த அம்மாள், மகனை வீட்டுக்குக் அழைத்துக்கொண்டு போய்விடத் தீர்மானித்தார்.

``கணேசா! நீயும் என்னுடன் வந்துவிடு" என்று தங்கவேலு அழைத்தார். சிவாஜிக்கும் ஒரு மாறுதல் தேவைப்பட்டது. எனவே, நண்பனுடன் கிளம்பத் தயாரானார். தங்கவேலுவின் உறவினர்கள் பொள்ளாச்சியில் இருந்தார்கள். அங்கு சென்று, அவர்களிடம் உதவி பெற்றுக்கொண்டு, திருச்சிக்குப் போக முடிவு செய்தார்கள்.


காட்டுப்பாதை


கொல்லங்கோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு நடந்தே சென்றார்கள். காட்டுப்பாதையில் 40 மைல் நடக்க வேண்டும். வழியில் பலத்த மழை பிடித்துக்கொண்டது. மழையில் நனைந்து கொண்டே சென்றார்கள். வழியில், ``ஐயோ" என்று தங்கவேலு அலறினார். சிவாஜி திரும்பிப்பார்த்தார். தங்கவேலுவின் கால் அருகே ஒரு பாம்பு நெளிந்து போய்க்கொண்டு இருந்தது. தங்கவேலுவை பாம்பு கடித்துவிட்டது என்பதை சிவாஜி உணர்ந்து கொண்டார். அலறிக்கொண்டிருந்த தங்கவேலுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். தங்கவேலுவின் தாயாரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். அங்குள்ளவர்கள், வைத்தியரை அழைத்து, தங்கவேலுவுக்கு தகுந்த சிகிச்சை அளித்தார்கள். தங்கவேலு பிழைத்துக்கொண்டார். பிறகு கிராமவாசிகளின் உதவியுடன் சிவாஜியும், தங்கவேலுவும், அவர் தாயாரும் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து திருச்சிக்கு போய்ச்சேர்ந்தார்கள்.


மெக்கானிக்


வீட்டில் ஒரு மாதகாலம் சும்மா இருந்தார், சிவாஜிகணேசன். குடும்பத்தை நடத்துவதற்கு பெற்றோர் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தார். ஏதாவது வேலைக்குப் போனால், அம்மாவுக்கு உதவியாக இருக்குமே என்று நினைத்தார்.அப்போது, ``திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்" (டி.எஸ்.டி.) என்ற பஸ் கம்பெனி இருந்தது. நண்பர் ஒருவரின் முயற்சியால், அந்த பஸ் கம்பெனியில் சிவாஜிக்கு மெக்கானிக் வேலை கிடைத்தது.

ஏற்கனவே, சிவாஜிக்கு மெக்கானிக் வேலை கொஞ்சம் தெரியும். ஒரு மாதம் பயிற்சி பெற்று, வேலையை நன்றாக கற்றுக்கொண்டார். அவருக்கு அப்போது சம்பளம் 7 ரூபாய்! அதை அம்மாவிடம் கொடுத்து விடுவார். மெக்கானிக் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும்,

மனம் நாடகத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.


``நாம் ஒரு நடிகன். இப்படி இரும்பைத் தூக்கிக்கொண்டு அலைகிறோமே. ஏதாவது விடிவுகாலம் வருமா? அல்லது காலம் எல்லாம் இப்படியே போய்விடுமா?" என்று நினைப்பார்.



நன்றி மாலை மலர்

வளரும் நாளை