அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

முல்லை பெரியாறு

இந்த அணையைப்பற்றி இப்பொழுது தமிழக கேரளஅரசுகள் விவாதிக்கிறார்களே அந்த அணையை கட்டியவர் யார் தெரியுமா?

கர்னல் பென்னி குக்:
21ம் நூற்றாண்டின் அசாத்திய மாகத் தெரிகிற நதி நீர் இணைப்பை 1895ல் நிகழ்திக் காட்டியவர் ஆங்கிலேய எஞ்சினியர் கர்னல் பென்னி குக். பெரும் சவால்களுக்கு இடையில் கேரளா நோக்கிப் பாய்ந்து கடலில் வீணான முல்லை - பெரியாறு நதிகளின் உபரி நீரை தமிழகத்தை நோக்கித்திருப்பிவிட்டார். இந்த அணை பல முறை நதிநீர் ஓட்டத்தால் தகர்க்கப்பட்டது. ஆங்கிலேய அரசு திட்டத்தைக் கை விட்டது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள வீடு, உடமைகளை விற்று சொந்த முயற்சியால் அணையைக் கட்டினார் குக். அணையிலிருந்து சுரங்கம் அமைத்து முல்லை பெரியாறின் உபரிநீரை வைகை நதியில் பாயச்செய்தார்.

நன்றி இந்தியா டுடே

நெல் வயல் அழிப்பு

பன்னாட்டு கம்பெனி மாதிரி நெல் வயல் அழிப்பு கோவை அருகே விவசாயிகள் ஆவேசம் அதிரடி


கோவை அருகே பன்னாட்டு கம்பெனி சார்பில் பயிரிடப்பட்டிருந்த பி.டி. நெல் மாதிரி வயலை நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு சென்று அழித்தனர்.


பாரம்பரிய விவசாய பயிர்ரகங்களுக்கு மாற்றாக மரபணு மாற்றப்பட்ட விதைகளை உலகம் முழுவதும் பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. மரபணு மாற்றப் பட்ட பி.டி. பருத்திரகத்தை மகாராஷ் மகாராஷ்ட்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாகிகோ நிறுவனம் அமெரிக்காவின் மான்ஸாண்டோ நிருவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியது.


பி.டி. ரகங்களை நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்காது. சாதாரண ரகங்களை விட 3 மடங்கு அதிய விளைச்சலை தரக்கூடியது என்று கூறப்பட்டாலும், மரபணு மாற்றப்பட்ட ரகங்களில் உள்ள விஷத்தன்மை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என்றும். மனிதஉடலு:க்கும், மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது என்றும் கூறி, உலகம் முழுவதும் இதற்கு எதிர்ப்ப கிளம்பி வருகிறது.


பி.டி. ரக பயிர்களில் விவசாயிகள் விதை உற்பத்தி செய்ய முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும் விதைகம்பெனிகளிடம் இருந்தே வாங்க வேண்டிய சூழ் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். தொடர்ந்து பி.டி.ரகங்களை பயிரிட்டால் பாரம்பரிய விதைகள் அழிந்து, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு கம்பெனிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இந்நிலையில் மான்ஸாண்டோ நிறுவனம் அறிமுகப் படுத்திய பி.டி.ரக பருத்தியை பயிரிட்ட ஆந்திர விவசாயிகள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காமல் பெரும் நஷ்டமடைந்து தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். பல விவசாயிகள் இழப்பீடு கோரி விதை கம்பெனனிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.


ஆனால் இதை கண்டுகொள்ளாமல் மான்ஸண்டோ நிறுவனமும், மாகிகோ நிறுவனமும் இணைந்து இப்போது மரபணு மாற்றபட்ட பி.டி.நெல்ரகங்கள் குறித்த ஆராய்சியில் ஈடு பட்டு வருகின்றன.


இதற்காக உத்திரபிரதேசம், மகாராஷ்ட்டிரா, குஜராத், சட்டிஸ்கர்,அரியானா,மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய இடங்களில் மாதிரி வயல்களை அமைத்து பி.டி. நெல்பயிரிட்டுள்ளனர். இதற்கு விவசாய அமைப்புகளும், சுற்றுச்சூழல் அமைப்பகளும் கடும்ம எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


கடந்தசில தினங்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் ராம்புரா என்ற கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த பி.டி. நெல்வயலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு சென்று அழித்தனர்.


இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஆலாந்துறை அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தில் 500க்கும் அதிகமான விவசாயிகள் திரண்டு, ரங்கராஜ் தோட்டத்தில் மாதிரி வயலில் இருந்த பி.டி. நெல் பயிர்களை பறித்து எறிந்தனர்.


சரியாக 30 நிமிடங்களில் பயிர்களை எல்லாம் அழித்தனர். இதில், உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லமுத்து, தமிழக பசுமை இயக்க தலைவர் ஜீவானந்தம் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இத்திட்டம் நரசிம்மராவ் காலத்திலேயே ஆலோசிக்கட்டது அப்போதுஎதிர்ப்பு கிளம்பியது

எம்.கே.டி. பாகவதர்

இன்று இவரது நினைவு நாள்
ஆன்மீகம்
http://aanmeekam.blogspot.com/2006/03/blog-post_21.html
ஆகத்தியர்
http://groups.yahoo.com/group/agathiyar/message/41122

அம்பிகாபதி சற்றே சரிந்தே

அசோக்குமார்

சிவகவி

கரிதாஸ்