அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

உத்தம் சிங்

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த போது, பஞ்சாப் கவர்னராக இருந்தவர் மைக்கேல் ஓ டயர் ஜெனரல் டயருக்கு பராட்டுத் தெரிவித்ததுடன் பஞ்சாபில் பொதுமக்களுக்கு எதிரான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டார் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மறுநாள் (ஏப்ரல் 14) ராணுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ராணுவச் சட்டத்தை மீறிதாக 218 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 51 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 17ல் மாணவர்கள் சைக்கிளில் செல்லத் தடை விதிக்கப் பட்டது. அதை மீறிய 518 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 107 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க ப்பட்டது 264 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் தீவுக்கு அனுப்பபட்டனர் தண்டனை அடைந்தவர்களில் 7 வயது சிறுவனும் இருந்தான்!.

மைக்கேல் ஓ டயர் 1913 முதல் 1919 வரை கவர்னராக இருந்தார். அப்போது அவரால் தூக்கு மேடைக்க அனுப்பபட்டவர்கள் 600 பேர் ஜாலியன் வாலாபாக் படு கொலையையும், அதன் பிறகு நிகழ்ந்த அட்டூழியங்களையும் நேரில் பார்த்தவர்களில் உத்தம் சிங் என்ற 20 வயது இளைஞரும் ஒருவர், மனித வேட்டையாடிய ஜெனரல் டயரையும், கவர்னர் மைக்கேல் ஓ டயரையும் கொன்று பழிக்குப் பழி வாங்குவேன் என்று அவர் சபதம் செய்தார்.


ஜெனரல் டயரை இங்கிலாந்து அரசு திரும்ப அழைத்துக் கொண்டதைத் தொடர்ந்து கவர்னர் மைக்கேல் ஓ டயரும் கவர்னர் பதவியை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு ஜுன் 1ம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றார் இதனால் இங்கிலாந்து நட்டுக்குச் சென்று இந்த இருவரையும் சுட்டுக்கொல்ல உத்தம் சிங் முடிவு செய்தார் வர்த்தகக் கப்பல் ஒன்றில் பணியாளராக தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்பு உத்தம் சிங்கிற்கு கிடைத்தது. 1921 ல் தென் ஆப்பிரி்க்காவுக்கு சென்று அங்கு இந்திய புரட்சி வீரர்கள் சிலருடைய உதவி பெற்று 1923ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். தன்னை என்ஜினியரிங் கல்லூரி மாணவர் என்று கூறிக்கொண்டு. தெரிந்த வேலைகளையும் செய்து கொண்டு காலத்தை ஓட்டினார்.


ஜெனர் டயர், மைக்கேல் ஓ டயர், ஷெட்லாண்டு ஆகிய மூவரையும் ஒரே சமயத்தில் தீர்த்துக் கட்ட சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய சுதந்திரப் போரில் முன்னணி வீரராகத் திகழ்ந்த பகத்சிங். உத்தம் சிங்கின் நண்பர் அவர் 1928ல் உத்தம் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார் 'புரட்சி' இயக்கத்துக்கு உன் போன்ற சுத்த வீரர்களின் சேவை தேவைப்படுகிறது உடனே புறப்பட்டு வா என்று குறிப்பிட்டு இருந்தார் அதன் பேரில் சில புரட்சி வீரர்களுடன் உத்தம் சிங் இந்தியா திரும்பினார். ஆனால் இநதியாவுக்கு வந்த சில நாட்களிலேயே போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்ட போது. அவரிடம் அமெரிக்க நாட்டு கை துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. உத்தம் சிங் சிறையில் இருந்த போது அவர் நண்பரான பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். இதனால் வெள்ளையார் மீது ஏற்கனவே இருந்த ஆத்திரமும். பழிவாங்கும் உணர்ச்சியும் அவருக்கு மேலும் அதிகமானது. சிறையில் இருந்து விடுதலையானதும் போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பி ஜெர்மனிக்குப் போனார் அங்கிருந்து லண்டன் சென்றார். 1940 மார்ச் 13ம் தேதி லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் மைக்கேல் டயரும், ஷெட்லாண்டும் ஒரே மேடையில் பேசுகிறார்கள் என்பதை அறிந்த உத்தம் சிங் அங்கு சென்றார். மேடைக்கு எதிரே 4-வது வரிசையில் அமர்ந்து கொண்டார்.


தன்னையாரும் அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக நன்றாக சேவ் செய்து கொண்டு கோட்டும் சூட்டும் அணிந்து சென்றார் சிலர் பேசிய பிறகு மைக்கெல் ஓ டயர் பேச எழுந்தான் இந்தியாவைத் தாக்கி காரசாரமாகப் பேசினான் சில நிமிடங்கள் பேசியபின் தன் இருக்கைக்கு செல்லத் திரும்பினான். இதுதான் சமயம் என்று மேடைக்கு தாவிச் சென்ற உத்தம் சிங் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துப் படபடவென்று 6 முறை சுட்டார் மைக்கேல் ஓ டயர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தான் கண்முடி கண் திறப்பதற்குள் ஷெட்லாண்டை நோக்கி இருமுறை சுட்டார். கூடியிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.


உத்தம் சிங் நினைத்திருந்தால் ஓடித் தப்பி இருக்க முடியும் ஆனால் தன் லட்சியத்தை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியுடன் அவர் அசையாமல் நின்றார். அவரைப் போலீசார் பிடித்துக் கொண்டனர். குண்டடி பட்டவர்களில் மைக்கேல் ஓ டயர் அதே இடத்தில் பிணமானான் மற்றவர்கள் காயத்துடன் தப்பினர். 1940ம் ஆண்டு ஜுலை 31ம் தேதி பெண்டேன் வில்லி சிறையில் உத்தம்சிங் தூக்கிலிடப்பட்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த 21 ஆண்டுகள் கழித்து 1940 மார்ச் 13ம் தேதி உத்தம் சிங் தனது சபதத்தை நிறைவேற்றினார்.


நன்றி 24-07-07 தினமலர்

Labels:

4மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Senthil Alagu Perumal

உத்தம் சிங் வரலாறு எம் கண்களில் நீர் வழியச் செய்தது. தாங்கள் அதை எழுதி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. மேலும் இவைப் போன்று நல்ல படைப்புகளை எழுத வேண்டுகிறேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger வவ்வால்

என்னார்,

நல்லப்பதிவு, உத்தம் சிங்க் , பகத் சிங்க் , ஜெய தேவ் போன்றோர் இளமையிளேயே நாட்ட்க்காக உயிர்த்யாகம் செய்தவர்கள், பகத் சிங்க் ஒரு சிறிய குப்பியில் ஜாலியன் வாலாபாக் ரத்தம் படிந்த மண்ணை எப்போதும் உடன் எடுத்து செல்வார் எனப்படித்துள்ளேன்!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி செந்தில்
இப்படித்தான் நல்லுள்ளங்களால் பெற்ற சுதந்திரத்தை இந்த நாட்டை கொள்ளையர்கள் கொள்ளயடிப்
பதைப் பாத்தீர்களா?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி வவ்வால்

 

Post a Comment

<< முகப்பு